பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் . 75

ஒட்டுபவனாகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியினுடைய அடியவராகிய பரமதத்தரே பெறுவதற்கு அருமையாக - உள்ள விருந்தாளி ஆகுமானால் அடியேன் பெறும் பாக்கியம் இதற்கு மேல் வேறு ஒன்றும் இல்லை என்னும் அறிவைப் பெற்றவராகி அந்த அடியவர் திரு.அமுது செய்வதற்காக பேராவலை உடையவரானார். பாடல் வருமாறு :

' கறியமுதங் குதவாதே

திரு.அமுது கைகூட வெறிமலர்மேல் திருவனையார், விடையவன் தன்.அடியாரே பெறலரிய விருந்தானால்

பேறிதன்மேல் இல்லை' எனும் அறிவினராய் அவர்.அமுது

செய்வதனுக் காதரிப்பார்.'

கறியமுது அங்கு கறியமுது அந்த இடத்தில். உதவாது - உதவாமற் போக. ஏ. அசைநிலை. திரு.அமுது . திருவமுது மாத்திரம். கைகூட கைகூடி வர. வெறி நறுமணம் கமழும். மலர்மேல் . செந்தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும். திரு . திருமகளை. அனையார் . போன்றவராகிய புனிதவதியார். விடையவன் - இடபவா கனத்தை ஒட்டுபவனாகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி யினுடைய தன் அசைநிலை. அடியாரே . அடியவராகிய பரமதத்தரே. பெறல் அரிய பெறுவதற்கு அருமையாக உள்ள விருந்து .விருந்தாளி; திணை மயக்கம். ஆனால் - ஆனாரானால். பேறு - அடியேன் பெறும் பாக்கியம். இதன் மேல் இல்லை. இதற்குமேல் வேறு ஒன்றும் இல்லை. எனும் - என்னும்: இடைக்குறை. அறிவினராய் அறிவைப் பெற்றவராகி. அவர் . அந்த அடியவர். அமுது செய்வ தனுக்கு - திருவமுது செய்வ த ற் கா க. ஆதரிப்பார். பேராவல் உடையவரானார். . х

அடுத்து வரும் 20 . ஆம் பாடலின் கருத்து வருமாறு .