பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 * பெரிய புராண விளக்கம் - 9.

அந்தத் திருமாளிகைக்கு உரியவனான தனதத்தன் வைப்பாயாக' என்று கூறத் தம்மிடம் முன்னால் இருந்த நல்ல நறுமணம் கமழும் இரண்டு மாம்பழங்களில் ஒரு மாம்பழத்தை எடுத்துக்கொண்டு மிக வேகமாகச் சென்று தன்னுடைய திருமாளிகைக்கு வந்து சேர்ந்து அந்த அடியவருக்கு அந்த மாம்பழத்தை இலையில் படைத்து விட்டுத் தம்முடைய திருவுள்ளத்தில் எழுந்த களிப்பினால் துன்பங்களைத் தீர்ப்பவராகிய ஊர்த்துவதாண்டவ மூர்த்தியினுடைய அடியவரைத் திருஅமுது செய்யுமாறு செய்தார். பாடல் வருமாறு : - -

இல்லாளன் வைக்க எனத்

தம்புக்கல் முன்இருந்த நல்லாறு மாங்கனிகள் .

இரண்டினில்ஒன் றைக்கொண்டு வல்விரைந்து வந்தணைந்து

படைத்துமணம் மகிழ்ச்சினால் அல்லல்தீர்ப் பவர்.அடியார்

தமை அமுது செய்கித்தார். இல்லாளன் . அந்தத் திருமாளிகையை ஆட்சி புரிபவ னாகிய தனதத்தன். வைக்க என . இந்த மாம்பழத்தை என்னுடைய திருமாளிகையில் ஒரு பாதுகாப்பாக உள்ள இடத்தில் வைப்பாயாக’ என்று கூற. என: இடைக்குறை. தி: சந்தி. தம் - தம்முடைய ஒருமை பன்மை மயக்கம். பக்கல் - இடத்தில். முன் இருந்த - முன்னால் வைத்திருந்த, நல்லநறு நல்ல நறுமணம் கமழும். மாங்கனிகள் . மாம்பழங்கள். இரண்டினில் - இரண்டில். ஒன்றை - ஒரு மாம்பழத்தை, க் சந்தி. கொண்டு - எடுத்துக் கொண்டு. வல்விரைந்து.மிக வேகமாகச் சென்று வந்து - தன்னுடைய திருமாளிகைக்கு வந்து. அணைந்து - சேர்ந்து, படைத்து - அந்த அடியவருக்கு அந்த மாம்பழத்தை இலையில் படைத்துவிட்டு. மனம் , தம்முடைய திரு வுள் ளத் தி ல் , எழுந்த. மகிழ்ச்சியினால் - ஆனந்தத்தால். 2ے{ ல் ல àು *