பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் ց 7

துன்பங்களை ஒருமை பன்மை மயக்கம். தீர்ப்பவர் . போக்கியருளுபவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி யி னு ைட ய. அ டி யார் த ைம - அடியவரை. தமை : இடைக்குறை. தாம் : அசைநிலை. அமுது செய்வித்தார்திரு.அமுது செய்யுமாறு செய்தார்: உண் ணு மாறு செய்தார். - - . பிறகு வரும் 21 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : முதுமையை அடைந்திருக்கும் அந்தத் தளர்ச்சி யினாலும், முதிர்ச்சியை அடைந்து தம்மைச் செலுத்திய உணவை விரும்பும் விருப்பமாகிய நெருப்பைப் போன்ற வயிற்றுப் பசியினுடைய நிலைமையினாலும், சோர்வை அடைந்து தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளிய திருத்தொண்டர் ஆகிய அந்த முதியவர் வாய்ப்பாக அமைந்த மென்மையான ஆறுவகையாகிய சுவைகளைப் பெற்ற உணவை அந்த ஒரு மாம்பழத்தினோடு இனிமை பாக உண்டு மலர்களை அணிந்து பழகிய மென்மையான கூந்தலைப் பெற்ற மடப்பத்தைப் பெற்றவராகிய புனித வதியாருடைய செயலுக்குத் தம்முடைய் திருவுள்ளத்தில் மகிழ்ச்சியை அடைந்து அந்தத் திருமாளிகையைவிட்டு அந்த முதிய அடியவர் சென்றார். பாடல் வருமாறு :

மூப்புறும்அத் தளர்வாலும்

முதிர்ந்துமுடு கியவேட்கைத் தீப்பசியின் கிலையாலும் -

அயர்ந்தணைந்த திருத்தொண்டர் வாய்ப்புறுமென் சுவை அடிசில்

மாங்கனியோ டினிதருக்திப் பூப்பயில்மென் குழல்மடவார்

செயல்உவந்து போயினார்." மூப்பு முதுமையை உறும் - அ டை ந்தி ரு க் கு ம். அத்தளர்வாலும் - அந்தத் தளர்ச்சியினாலும். முதிர்ந்து . முதிர்ச்சியை அடைந்து. முடுகிய - தம்மைச் செலுத்திய,