பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. பெரிய புராண விளக்கம். 9

வேட்கை-உணவை விரும்பும் விருப்பமாகிய, த் சந்தி. தி - நெருப்பைப் போன்ற; உவம ஆகுபெயர். ப் : சந்தி, பசியின் வயிற்றுப் பசியினுடைய. நி ைல யா லு ம். நிலைமையினாலும். அயர்ந்து - சோர்வை அடைந்து. அணைந்த - தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளிய, திருத்தொண்டர் - திருத்தொண்டராகிய அந்த முதியவர். வாய்ப்புறு - வாய்ப்பாக அமைந்த. மென் - மென்மையான. சுவை கைப்பு, புளிப்பு, இனிப்பு, உப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என்னும் ஆறு சுவைகளைக் கொண்ட, ஒருமை பன்மை மயக்கம். அடிசில் உணவை. மாங்கனியோடு. அந்த ஒரு மாம்பழத்தோடு, இனிது - இனிமையாக. அருந்தி - உண்டு. ப்: சந்தி. பூ - மலர்களை ஒருமை பன்மை மயக்கம். ப் : சந்தி, பயில் - அணிந்துகொண்டு பழகிய மென் - மென்மையாகிய, குழல் - கூந்தலைப் பெற்ற, மடவார் - மடப்பத்தைக் கொண்ட புனிதவதி. யாருடைய, செயல் .ெ ச ய லு க் கு. உவந்து:மகிழ்ச்சியை அடைந்து, போயினார் - அ ந் த த் திரு. மாளிகையைவிட்டு அந்த முதிய அடியவர் சென்றார்.

பிறகு வரும் * - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

அந்த முதிய அடியவர் அவ்வாறு அந்தத் திருமாளிகையைவிட்டுச் செ ன் ற பிற கு. அந்தத் திருமாளிகைக்குத் தலைவனாகிய வைசியனாகும் தனதத் தன் அன்று வந்த பெரியதாக இருக்கும் முற்பகலில் ஓங்கி உயர்ந்து நின்ற பெருமையைப் பெற்று விளங்கும். தன்னுடைய திருமாளிகையை அடைந்து பொலிவு பெறு மாறு முன்னால் நறும்புனலில் முழுகிவிட்டுத் தன்னுடைய திருமாளிகைக்குள் நுழைந்து உணவை விரும்பி உண்ண கற்பையும் மடப்பத்தையும் பெற்றவராகிய புனிதவதி யாரும். தம்முடைய கடமையினால் தம்முடைய கணவராகிய பரமதத்தரை உண்ணுமாறு புரிவாரானார்." பாடல் வருமாறு : - - -