பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலச்சிறை நாயனார் புராணம் . . z

றொண்டர் தாம் - வன்றொண்டராகிய சுந்தரமூர்த்தி நாயனார். தாம் : அசைநிலை. பெருநம்பி என்று - பெ ரு நம் பி எ ன் று பா ரா ட் டி ப் பேசப் பெ ற் ற வ ரு ம்; வினை யால ைண யு ம் பெயர். குலச்சிறை நாயனாரைச் சுந்தர மூர்த்தி நாயனார் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில் 4-ஆம் பாசுரத்தில், பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்” எனப் பாடியிருக்கிறார். ஒதிய-பாராட்டிப் பேசிய, செப்பரும் எடுத்துக் கூறுவதற்கு அருமையாக இருக்கும். சீர் - சீர்த்தியைப் பெற்ற. க்சந்தி. குலச் சிறையார் - பாண்டிய மன்னனுடைய முதல் அமைச்ச ராகிய குலச்சிறை நாயனார். திண்மை - தம்முடைய திருவுள்ளத்தில் அமைந்த உறுதியாகிய, வைப்பினால் . செல்வத்தால், திருத்தொண்டில் . தாம் புரியும் பல வகைத் திருத்தொண்டுகளிலிருந்து உருபு மயக்கம்: ஒருமை பன்மை மயக்கம். வழாதவர் . தவறாதவர். -

பிறகு வரும் 3-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்றவராகிய சோமசுந்தரக் கடவுளுக்குப் பக்தர் என்ற காரணத்தினால் அவ்வாறு பாராட்டிக் கூறவே பக்தராக விளங்கி மகிழ்ச்சியை அடைந்து அந்தப் பக்தர்களுடைய திருவடி களின் மேல் நிறைந்திருக்கும் பக்தியோடு தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தம்முடைய கைகளைத் தம்முடைய தலையின் மேல் வைத்து அஞ்சலியாக அரும்பி அன்பைப் பெற்ற நல்ல வார்த்தைகளைத் தம்முடைய திரு மாளிகைக்கு அந்தப் பக்தர்கள் அடைய திருவாய் மலர்ந் தருளிச் செய்திருப்பவர். பாடல் வருமாறு :

காரணம் கண்ணுதற் கன்பர் என்னவே வார மாகி மகிழ்ந்தவர் தாள்மிசை ஆரும் அன்பொடு வீழ்ந்தஞ் சலிமுகிழ்த் தீர நன்மொழி எய்த இசைத்துளார்.