பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பெரிய புராண விளக்கம். 9

கண்ணுதற்கு தம்முடைய நெற்றியில் ஒற்றைக் கண்ணைப் பெற்றவராகிய சோமசுந்தரக் கடவுளுக்கு. அன்பர் - பக்தர். காரணம் - என்ற காரணத்தினால். என்னவே அவ்வாறு பாராட்டிக் கூறவே. வாரம் ஆகி - பக்தராக விளங்கி. வாரம் : திணை மயக்கம். மகிழ்ந்து - மகிழ்ச்சியை அடைந்து. அவர் . அந்தப் பக்தர்களினுடைய: ஒருமை பன்மை மயக்கம். தாள் . திருவடிகளின்; ஒருமை பன்மை மயக்கம். மிசை . மேல். ஆரும் . நிறைந்திருக்கும்" அன்பொடு . பக்தியோடு, வீழ்ந்து. தரையில் விழுந்து வணங்கி விட்டு. அஞ்சவி . பிறகு தரையிலிருந்து எழுந்து 'தின்று கொண்டு தம்முடைய தலையின் மேல் வைத்து அஞ்சலியாக. முகிழ்த்து . அரும்பி, ஈர - அன்பைப் பெற்ற: இன் சொலால் ஈரம் அளைஇ என்று திருக்குறளில் அருவதைக் காண்க. நன் - நல்ல. மொழி - வார்த்தை களை ஒருமை பன்மை மயக்கம். எய்த தம்முடைய திரு மாளிகைக்கு அந்தப் பக்தர்கள் வந்து சேர. இசைத் துளார் - திருவாய் மலர்ந்தருளிச் செய்திருப்பவர். உளார்: இடைக்குறை. - . -

பிறகு வரும் 4-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : 'அடையாளங்களால் அந்தனர், அரசர், வைசியர், வேளாளர் என்னும் நான்கு சாதிகளிற் பிறந்தவர்களா னாலும், தாம் வாழும் வழியில் அந்தச் சாதிகளி லிருந்து வேறுபட்ட பள்ளர், பறையர், சக்கிலியர் என்ற இழிகுலத்தில் பிறந்தவர்கள் ஆனாலும் தங்களுடைய அறிவுகள் சங்கரனாகிய சோமசுந்தரக் கடவுளுக்குப் பக்தர் என்று கூறும் பாக்கியத்தைப் பெற்றிருந்தால் அவர்களோடு கலத்தல் அமையுமாறு அந்தப் பக்தர்களை அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்கிவிட்டு, பிறகு அந்தப் பக்தர் களைத் துதித்திருக்கும் செயலை உடையவர் அந்தக் குலச்சிறை தாயனார். பாடல் வருமாறு : .

குறியில் கான்கு குலத்தின ராயினும் கெறியின் அக்குலம் நீங்கின ராயினும்