பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

oso பெரிய புராண விளக்கம் 9

இலையில் வைத்ததற்குப்பிறகு நிலைபெற்ற புகழையும் சீர்த்தியையும் பெற்ற தம்முடைய கணவனாகிய பரமதத் தன் தன்னுடைய திருமாளிகையில் பாதுகாப்பான ஒரிடத்தில் வைக்குமாறு செய்த நல்ல இனிய சுவையைப் பெற்ற இரண்டு மாம்பழங்களில் எஞ்சியிருந்த ஒரு மாம்பழத்தை நறுமணம் கமழும் கூந்தலைப் பெற்றவரும், அன்னப் பறவையைப் போன்றவரும் ஆகிய புனிதவதி யாரும் அந்த மாம்பழத்தை எடுத்துக்கொண்டு வந்து உண்கலமாகிய நுனிவாழை இலையில் படைத்தார்." :பாடல் வருமாறு: - c

இன்னடிசில் கறிகளுடன்

எய்துமுறை இட்டதற்பின் மன்னியசீர்க் கணவன்தான்

மனையிடைமுன் வைப்பித்த கன்மதுர மாங்கனியில்

இருந்ததனை கறுங்கூந்தல் அன்னமனை யார்தாமும் - .

கொடுவந்து கலத்தளித்தார்.' i. இன் - இனிய ஆறு சுவைகளைப் பெற்ற. அந்தச் சுவைகள் இன்ன என்பதை முன்பே ஓரிடத்தில் கூறினோம்: - ஆண்டுக் கண்டுணர்க. அடிசில்-சோற்றை. கறிகளுடன்-ப்ல வகையாகிய கறியமுதுகளோடு. எய்தும் அடையும். முறைமுறைப்படி. இட்டதற்பின் . அந்த துணிவாழையிலையில் படைத்ததற்குப்பிறகு. மன்னிய - நிலைபெற்ற புகழையும்: பெயரெச்ச வினையாலணையும் பெயர். சீர்.சீர்த்தியையும் பெற்ற. க் சந்தி. க ண வ் ன் தான் . த ம் மு ைட ய கணவனாகிய பரமதத்தன். தான் : அசைநிலை. மனை.

-யிடை தன்னுடைய திருமாளிகையில். முன் . முன்னால்.

வைப்பித்த - பாதுகாப்பான ஒ ரி ட த் தி ல் வைக்குமாறு செய்த. நன் - நல்ல. மதுர - இனிய சுவையைப் பெற்ற. மாங்கனியில் - இரண்டு மாம்பழ்ங்களில்: ஒருமை பன்மை aaa asià. இருந்ததனை - அந்த முதிய அடியவருக்குப்