பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 81

படைத்து எஞ்சியிருந்த ஒரு மாம்பழத்தை. தனை: இடைக்குறை, தன்: அசை நிலை. நறும். நறுமணம்: இயற்கையாகவே கமழும். கூந்தல் - தலைமயிரைப் பெற்ற. அன்னம் . அன்னப்பறவையை. அ ைன யார் தாமும் - போன்றவராகிய புனிதவதியாரும். தாம் : அசைநிலை. பெண்களுக்கு அன்னத்தை உவமையாகக் கூறும் இடங்களை முன்பே ஒரிடத்தில் கூறினோம்: ஆண்டுக் கண்டுணர்க. கொடு வந்து அந் த ஒரு. மாம்பழத்தை எடுத்துக்கொண்டு வந்து. கலத்து - உண் கலமாகிய நு னி வா ைழ இ லை யி ல், அ வித் தா ர் - படைத்தார். .

பிறகு வரும் 24- ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

'தன்னுடைய பத்தினியாராகிய புனிதவதியார் துணி, வாழை இலையில் படைத்திருந்த இனிய சுவை மிகுதியாக வாய்க்கப்பெற்ற அந்த ஒரு மாம்பழத்தை உண்ட இனிய சுவையினால், திருப்தி அடையாமையினால் மல்ர்மாலைப் பூண்டு கொண்டு விளங்கும் வைசியனாகிய பரமதத்தன்,

'இத்தகையதாகிய ஒரு மாம்பழம் இன்னும் எஞ்சி இருப்பதை என் வாழை இலையில் வைப்பாயாக." என்று அந்தப் பரமதத்தன் கூற, அத்தகையதாகிய மாம்பழத்தை எடுத்துக்கொண்டு வருவதற்குத் தய்முடைய திருமாளி |கைக்குள் துழைபவரைப் போல அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றார். பாடல் வருமாறு :

மனைவியார் தாம்படைத்த

மதுரம்மிக வாய்த்தகனி தனை நுகர்ந்த இனியசுவை w ஆராமைத் தார் வணிகன் இனையதொரு பழம் இன்னும்

உளததனை இடுக’ என அணையதுதாம் கொண்டு வர -

அணைவர்போல் அங்ககன்றார்.'"