பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 83

புனிதவதியாருடைய வலக்கையின் பக்கத்தில் வந்து ஒர் மிகுதியாகிய இனிய சுவையைப் பெற்ற ஒரு மாம்பழம் இருந்தது. பாடல் வருமாறு :

அம்மருங்கு கின்றயர்வார்;

அருங்கணிக்கங் கென்செய்வார்? மெய்ம்மறந்து கினைந்துற்ற

இடத்துதவும் விடையவர்தாள் தம்மனம்கொண் டுணர்தலுமே . அவர் அருளால் தாழ்குழலார்

கைம்மருங்கு வந்திருந்த

ததிமதுரக் கணிஒன்று. ’’

அம்மருங்கு நின்று . அந்தப் பக்கத்திலிருந்து சென்று. அயர்வார் . அந்தப் புனிதவதியார் சோர்வை அடைவார். அரும் - கிடைப்பதற்கு அருமையாக விளங்கும். கணிக்கு - மாம்பழத்திற்கு, அங்கு . அந்தத் திருமாளிகையில். என் - என்ன செய்வார். செயலைப் புரிவார். மெய் - தம் முடைய திருமேனியை. ம் : சந்தி. மறந்து . மறந்து விட்டு. நினைந்து எண்ணி உற்ற இடத்து . ஒரு துன்பம் வந்த சமயத்தில். உதவும். அந்தத் துன்பம் நீங்குமாறு உதவியைப் புரிந்தருளும். விடையவர் இடபவாகனத்தை ஒட்டுபவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாருடைய. தாள் - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். தம் - தம்முடைய மனம் . திருவுள்ளத்தில். கொண் டு - தியானித்துக்கொண்டு. உணர்தலும் - உணர்ந்தவுடன். ஏ , அசைநிலை. அவர் - அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியார். அருளால் - வழங்கிய திருவருளினால். தாழ் - தொங்கும். குழலார் . கூந்தலைப் பெற்றவராகிய புனிதவதியாருடைய. கை ம் மரு ங் கு - வ ல க் கையி ன் பக்கத்தில். அதிமதுர, மிக்க இனிய சுவையைப் பெற்ற க்: சந்தி, கனிஒன்று . ஒரு மாம்பழம். வந்து இருந்தது - வந்து தங்கியிருந்தது. - , “ ... --