பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - - பெரிய புராண விளக்கம். 9

பிறகு வரும் 28 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

அந்த மாம்பழத்தைப் புனிதவதியார் தம்முடைய திருமாளிகைக்கு உள்ளேயிருந்து எடுத்துக் கொண்டு வந்து மகிழ்ச்சியை அடைந்து தம்முடைய கணவனாகிய பரமதத் தன் உண்ணும் கலமாகிய நுனிவாழையிலையில் வைத்த, வுடன் அந்த மாம்பழத்தை உண்டு அந்தப் புழத்தில் இருந்த இனிய சுவை அமிர்தத்தைக் காட்டிலும் மேலாக இருப்ப தாகியிருக்க, இந்த மாம்பழம் முன்னால் யான் தந்த மாம்பழம் அன்று; இது அந்தர்மத்திய பாதலம் என்னும் மூன்று உலகங்களிலும் பெறுவதற்கு அருமையானது: இந்த மாம்பழத்தை வேறு எந்த இடத்தில் நீ வாங்கியது?' எனத் தம்முடைய கைகளில் அணிந்துகொண்ட வளையல் களைக் கொண்டவராகிய புனிதவதியாரை அந்தப் பரமதத்தன் வினவினான். பாடல் வருமாறு :

மற்றதனைக் கொடுவந்து, s மகிழ்ந்திடலும் அயின்றதனில்

உற்றசுவை அமுதினு:மேற்பட

உளதாயிட இதுதான் முற்றருமாங் கனியன்று: .

மூவுலகில் பெறற்கரிதால், பெற்றது.வேறெங் கென்று

பெய்வளையார் தமைக்கேட்டான்."

மற்று : அசை நிலை. அதனை - அந்த மாம்பழத்தை. க் சந்தி, கொடுவந்து புனி த வ தி யார் தம்முடைய திருமாளிகைக்கு உள்ளேயிருந்து எடுத்துக்கொண்டு வந்து. மகிழ்ந்து - மகிழ்ச்சியை அடைத்து. இட்லும் தம்முடைய கணவனாகிய பரமதத்தன் உண்ணும் கலமாகிய நுனி வாழை இலையில் வைத்தவுடன். அயின்று . அந்த மாம்பழத்தை உண்டு. அதனில் . அந்தப் பழத்தில். உற்ற இருந்த, சுவை இனிய சுவை. அமுதினும் . அமிர்தத்தைக் காட்டிலும். மேற்படி உளதாய - மேலாக