பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் - ፰ 8? '

கார்த்துவ தாண்டவ. மூர்த்தியாருடைய செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளைத் தம்முடைய திருவுள்ளத்தில் அமையுமாறு வைத்துப் பணிந்து கிடைப் பதற்கு அருமையாக இருக்கும் இந்த மாம்பழத்தை வழங்கியவர் ஆர்' என்று கேட்கும் தம்முடைய கணவனாகிய பரமதத்தனிடம் வண்டுகள் மொய்க்கும் மலர்களை அணிந்திருக்கும் கூந் த லைப் பெற்ற மடப்பத்தைக் கொண்டவராகிய அந்தப் புனிதவதியார். நடந்ததை நடந்த வண்ணம் தம்முடைய கணவளாகிய பரமதத்தனிடம் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்." பாடல் வருமாறு : . . " . . .

" செய்தபடி சொல்லுவதே

கட்ன்' என்னும் சீலத்தார் மைதழையும் கண்டர்சே . வடிகள்மனத் துறவணங்கி

எய்தவரும் கனிஅளித்தார்

யார்?' என்னும் கணவனுக்கு மொய்தருபூங் குழல்மடவார்

புகுந்தபடி தனைமொழிந்தார்.”

. செய்தபடி - அடியேன் புரிந்தவாற்றை சொல்லுவதே. தம்முடைய கணவனாகிய புரமதத்தருக்கு எடுத்துக்

கூறுவதே. கடன் - அடியேனுடைய கடமை. என்னும். என்று எண்ணும். சீலத்தார் - நல்ல பண்பைப் பெற்ற வராகிய அந்தப் புனிதவதியார். மை. மையைப் போலக் கரிய நிறம் உவம ஆகுபெயர். கரிய நிறம் என்றாலும் இங்கே நீலநிறத்தையே கொள்க. கருமையையும் நீல நிறம் என்றல் வழக்கு: நீல நிறக்காக்கை' என வருவதைக் காண்க. தழையும் - தழைத்து விளங்கும். கண்டர் . திருக்கழுத்தைப் பெற்றவராகிய ஊர்த்துவ தாண்டவ. மூர்த்தியாருடைய சேவடிகள் . செந்தாமரை மலர்களைப் போலச் சிவந்த திருவடிகளை மனத்து - தம் முை டக்