பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sé - - பெரிய புராண விளக்கம் . 9

திருவுள்ளத்தில். உற அமையுமாறு வைத்து. வணங்கி . பணிந்து. எய்த அரும் - அடைவதற்கு அருமையாக இருக்கும். கனி - இந்த மாம்பழத்தை அளித்தார் . வழங்கியவர். யார் - ஆர். என்னும் - என்று கேட்கும். கணவனுக்கு - தம்முடைய கணவனாகிய பரம த த் தனிடம்; உருபு மயக்கம், மொய்தரு , வ ண் டு க ள் மொய்க்கும். பூங் - மலர்களை அணிந்து கொண்டிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். அந்த மலர்கள் இன்ன என்பதை வேறு ஓரிடத்தில் கூறினோம்; ஆண்டுக் கண்டுணர்க. குழல் - கூந்தலைப் பெற்ற, மடவார் - மடப்பத்தைப் பெற்றவராகிய அந்தப் புனிதவதியார். புகுந்தபடி . நடந்ததை நடந்த வண்ணம். தனை : இடைக்குறை. தன்: அசைநிலை. மொழிந்தார். தம்முடைய கணவனா ராகிய பரமதத்தனிடம் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார்.

பிறகு வரும் 29 ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

இது பரமேசுவரனாகிய ஊர்த்துவ தாண்டவமூர்த்தி வழங்கிய திருவருளால் கிடைத்தது' என்று தன்னுடைய பத்தினியாராகிய புனிதவதியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த வார்த்தைகளைக் கேட்ட அந்தத் திருமாளிகைக்குத் தலைவனாகிய பரமதத்தன் தன்னுடைய மனைவியாராகிய புனிதவதியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த அந்த வார்த்தைகளைத் தெளிவாக அறிந்து கொள்ளாதவனாகி நறுமணம் கமழும் செந்தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும் திருமகளைப் போன்றவராகிய அந்தப் புனிதவதியாரைப் பார்த்து, "இந்தப் பழம் ஒளியைப் பெற்ற சடாபாரத்தைத் தம்முடைய தலையின்மேற் பெற்றவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியார் வழங்கிய திருவருளாகுமானால், இனியும் ஓர் குற்றம் இல்லாத ஒரு மாம்பழத்தை அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி வழங்கும் திருவருளால் வருவித்து என்னிடம் கொடுப்பாயாக' என்று அந்தப் பரமதத்தன் தன்னுடைய பத்தினியாராகிய, புனிதவதி

பாரிடம் கூறினான். பாடல் வருமாறு :