பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 89

ஈசன் அருள்" எனக்கேட்ட

இல்இறைவன் அதுதெளியான்

வாசமலர்த் திருஅணையார்

தமைகோக்கி, மற்றிதுதான்

தேசுடைய சடைப்பெருமான்

திருவருளேல் இன்னமும் ஓர்

ஆசில்கனி அவனருளால் -

அழைத்தளிப்பாய்' எனமொழிக்தான். '

ஈசன் - இந்த மாம்பழம் பரமேசுவரனாகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி. அருள் - வழங்கிய தி ரு வ ரு ள | ல் அடியேனுக்குக் கிடைத்தது: ஆகுபெயர். என - என்று தன்னுடைய பத்தினியாராகிய புனிதவதியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த இடைக்குறை, கேட்ட அந்த வார்த்தைகளைக் கேட்ட இல் - அந்தத் திருமாளிகைக்கு. இறைவன் - உ | ய வ னா கி ய ப ர ம த த் த ன். அது - தன்னுடைய பத்தினியாராகிய புனிதவதியார் திருவாய் மலர்ந்தருளிச் செய்த அந்த வார்த்தைகளை ஒருமை பன்மை மயக்கம். தெளியான் - தெளிவாக அறிந்து கொள்ளாதவனாகி; முற்றெச்சம். வாச . ந று ம ண ம் கமழும். மலர் - செந்தாமரை மலரின் மேல் வீற்றிருக்கும். த் : சந்தி. திரு - திருமகளை, அனையார்தமை - போன்ற வராகிய புனிதவதியாரை. தமை : இடைக்குறை. தம் : அசைநிலை. நோக்கி - பார்த்து. மற்று : அசைநிலை. இது . தான்.இந்த மாம்பழம். தான்: அசைநிலை. தேசு - ஒளியை, உடைய பெற்ற, சடை-சடாபாரத்தைத் தம்முடைய தலை மேற்பெற்ற, ப் : சந்தி. பெருமான் - த ைல வ ரா கி ய. ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியார்: ஒரு ைம ப ன் ைம் மயக்கம். திருவருளேல் - திருவருள் ஆகு மா னால், இன்னமும் - இனிமேலும். ஓர் . ஒரு. ஆசு - கு ற்ற மும். இல் இல்லாத கடைக்குறை. கனி . ஒரு மாம்பழத்தை. அவன் - அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி. அருளால் - வழங்கும் திருவருளினால், அழைத்து - இங்கே வருவித்து.