பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. பெரிய புராண விளக்கம் . 9

அளிப்பாய் - நீ என்னிடம் கொடுப்பாயாக என . என்று; இடைக்குறை. மொழிந்தான் - அந்தப் பரமதத்தன் தன்னுடைய பத்தினியாராகிய பு னி த. வ தி யா ரி ட ம் கூறினான். - - -

பிறகு வரும் 30 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

தம்முடைய திருமாளிகையின் ஒரு பக்கத்திற்கு அகன்று. சென்று பரமதத்தனுடைய பத்தினியாராகிய புனிதவதி யார் பாம்புகளை அணிபவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாரைப் புகழ்ந்து வணங்கிவிட்டு, இந்த இடத்தில் இந்த மாம்பழத்தைத் தேவரீர் வழங்கியருளாவிட்டால் அடியேன் கூறிய வார்த்தைகள் பொய் வார்த்தைகள்

ஆகிவிடும்' என்று அந்தப் புனிதவதியார் திருவாய்

மலர்ந்தருளிச் செய்ய ஒரு மாம்பழம் அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியார் வழங்கிய திருவருளால் வந்து சேர்ந்தவுடன் அந்த மாம்பழத்தை அந்த இடத்தில் அந்தப் பரமத்தனுடைய கையில் அந்தப் புனிதவதியார் வழங்கியவுடன் அந்த மாம்பழத்தை வியப்பை அடைந்து அந்தப் பரமதத்தன் தன்னுடைய வலக்கையில் வாங்கிக் கொண்டான். பாடல் வருமாறு : * ,

“ பாங்ககன்று மனைவியார்

பணியணிவார் தமைப்பரவி

'ஈங்கிதளித் தருளிரேல்

என்னுரைபொய் யாம்' என்ன

மாங்கனிஒன் றருளால்வக்

தெய்துதலும் மற்றதனை

ஆங்கவன்கைக் கொடுத்தலுமே

அதிசயித்து வாங்கினான்.'

- பாங்கு - தம்முடையதிருமாளிகையின் ஒரு பக்கத்திற்கு.

அகன்று-அகன்று சென்று. ம ைன வியார் - பரமதத் தனுடைய பத்தினியாராகிய புனிதவதியார். பணி .