பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் - - 91

பாம்புகளை ஒருமை பன்மை மயக்கம். அணிவார் தமை - அணிபவராகிய ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியாரை. தமை : இடைக்குறை. தம் : அ ைச நி ைல. ப் : சந்தி. பரவி - புகழ்ந்து வணங்கிவிட்டு. சங்கு - இந்த இடத்தில்: இது-இந்தமாம்பழத்தை. அளித்தருளிரேல்-தேவரீர் வழங்கி யருளாவிட்டால். எ ன் - அ டி .ே யணு ைடய. உரை : வார்த்தைகள்: ஒருமை பன்மை மயக்கம். பொய் - பொய் வார்த்தைகள்:tஒருமை பன்மை மயக்கம். ஆம் - ஆகிவிடும். என்ன - என்று அந்தப் புனிதவதியார் திருவாய் மலர்ந் தருளிச் செய்ய. மாங்கனி ஒன்று - ஒரு மாம்பழம். அருளால் . அந்த ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியார் வழங்கிய திருவருளால், வந்து எய்துதலும் . வந்து சேர்ந்தவுடன். மற்று : அசைநிலை. அதனை . அந்த மாம்பழத்தை. ஆங்கு - அந்த இடத்தில். அவன் - அந்தப் பரமதத்தனுடைய. கை - வ ல க் ைக யி ல், ள் : சந்தி. கொடுத்தலும் . அந்தப் புனிதவதியார் வழங்கியவுடன். ஏ : அசைநிலை. அதிசயித்து - வியப்பை அடைந்து. வாங்கினான் - அந்தப் பரம த த் த ன் தன்னுடைய வலக்கையில் வாங்கிக் கொண்டான்.

೨®ಹಣ உள்ள 31 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"அந்த வைசியனாகிய பரமதத்தனும் தன்னுடைய வலக்கையில் புகுந்த மாம்பழத்தைப் பிறகு பார்க்க முடியாதவனாகி தணிதல் அருமையாக இ ரு க் கு ம். அச்சம் தன்மேற் கொள்ள தன்னுடைய திருவுள்ளமும் தடுமாற்றத்தை அடைந்து மலர்களை அணிந்து கொண்டி ருக்கும் கூந்தலைப் பெற் ற வரா கிய அந்தப் புனிதவதியாரை வேறாக உள்ள ஒரு தெய்வப் பெண்மணி என்று எண்ணி தன்னுடைய பத்தினியாராகிய அந்தப் புனிதவதியாரை அந்தக் காரைக்காவில் விட்டு விட்டு அகன்று செல்லும் தீர்மானத்தைத் தன்னுடைய உள்ளத்தில் மேற்கொண்டு வேறு யாருக்கும் கூறானாசி