பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 93 .

பிறகு உள்ள 32 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

அந்தப் பரமதத்தன் தன்னுடைய பத்தினியாராகிய புனிதவதியாரைக் காரைக்காலிலேயே விட்டுவிட்டுப் போவதே தன்னுடைய உள்ளத்தில் கொண்ட எண்ணமாக இருக்க அந்த எண்ணத்தின்படி அந்தக் காரைக்காலை விட்டுவிட்டு வேறிடத்திற்குச் செல்லுவதற்காக அமைந்த இடைவிடாத முயற்சியை அந்தப் பரமதத்தன் புரிவானாகி, "உண்டாகிய அலைகள் வீசும் சமுத்திரத்தின்மேல் ஓடும் மரக்கலத்தை எடுத்துக்கொண்டு, அதன்மேல் ஏறிச்சென்று. நெடுங்காலமாக இருப்பதற்கு உரிய செல்வத்தை யான் ஈட்டிக்கொண்டு வருவேன்' என்று கூறிவிட்டு வரிசையாக உள்ள பல உறவினர்களாகி விளங்கும் ஒரு குற்றமும் இல்லாத சீர்த்தியைப் பெற்ற வைசிய மக்கள் ஒரு மரக் கலத்தைக் கட்டச் செய்தார்கள். பாடல் வருமாறு :

விடுவதே எண்ண மாக -

மேவிய முயற்சி செய்வான் :படுதிரைப் பரவை மீது

படர்கலம் கொண்டு போகி நெடுநிதி கொணர்வேன்' என்ன

நிரந்தபல் கிளைஞ ராகும் வடுவில்சீர் வணிக மாக்கள்

மரக்கலம் சமைப்பித் தார்கள்." ... விடுவதே - அந்தப் பரமதத்தன் தன்னுடைய பத்தினி யாராகிய புனிதவதியாரைக் காரைக்காலிலேயே விட்டு விட்டுப் போவ தே. எ ண் ண ம் ஆக - தன்னுடைய உள்ளத்தில் கொண்ட நினைப்பாக இருக்க மேவிய அந்த எண்ணத்தின்படி அந்தக் காரைக்காலை விட்டுவிட்டு வேறு ஊருக்குச் செல்லுவதற்காக அமைந்த. முயற்சி . இடைவிடாத முயற்சியை செய்வான் - அந்தப் பரமதத்தன் புரிவானாகி; முற்றெச்சம், படு - உண்டாகிய திரை . அலைகள் வீசும்: ஒருமை பன்மை மயக்கம். ப் சந்தி.