பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sos பெரிய புராண விளக்கம் . 9

  • கடல்மிசை வங்கம் ஒட்டிக் கருதிய தேயக் தன்னில் அடைவுறச் சென்று சேர்ந்தங் - களவில் பல் வளங்கள் முற்றி

இடைசில நாட்கள் நீங்க

மீண்டும்.அக் கலத்தில் ஏறிப் படர்புனற் கன்னி நாட்டோர்

பட்டினம் மருங்கு சேர்ந்தான்.'"

கடல்மிசை - அந்தப் பரமதத்தன் சமுத்திரத்தின்மேல். வங்கம் . ஒரு கப்பலை. ஒட்டி - ஒடச் செய்து. க் சந்தி. கருதிய - தான் போக வேண்டும் என்று எண்ணிய, தேயந்தன்னில் - நாட்டில். தன் : அசைநிலை. அடைவு உற அடையுமாறு. ச் : ச ந் தி. சென் று - போய். சேர்ந்து . அந்த அயல் நாட்டை அடைந்து, அங்கு - அந்த அயல்நாட்டில். அளவு - ஓர் அளவு. இல் - இல்லாத கடைக்குறை. பல் - பல. வளங்கள் - செல்வங் களை. முற்றி . முழுவதும் ஈட்டி. இடை - நடுவில். சில நாட்கள் . சில தினங்கள். நீங்க் - அகன்றுபோக. மீண்டும் - மறுபடியும். அக்கலத்தில் - அந்த மரக்கலத்தின்மேல். ஏறி - அந்தப் பரமதத்தன் ஏறிக்கொண்டு. ப் : சந்தி. படர் - விரிந்து செல்லும், புனல் - நீர்வளத்தைப் பெற்ற. கன்னிநாட்டு - கன்னி நாடாகிய பாண்டிநாட்டில் உள்ள. :ஓர் - ஒரு பட்டினம் - கடற்கரைப் பட்டினமாகிய நாகப் பட்டினத்தினுடைய மருங்கு பக்கத்தை. சேர்ந்தான் - அந்தப் பரமதத்தன் சென்று அடைந்தான்.

பிறகு வரும் 35 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அந்தச் சிவத்தலமாகிய நாகப்பட்டினத்தில் தான் சென்ற கப்பலிலிருந்து கரையில் அந்தப் பரமதத்தன் ஏறிக்கொண்டு கணக்கு இல்லாத பல செல்வங்களை உண்டாக்கும் ஒப்பு இல்லாத பெரிய நிதியங்கள் எல்லா வற்றையும் ஒரு வழியாகப் பெருகி வருமாறு அந்தக்