பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் 97

கப்பலைச் செலுத்தி உண்மையாகிய புகழ் திகழும் அந்த, நாகப்பட்டினமாகிய ஊரில் வாழும் மக்கள் விழைய ஒரு. வைசியன் ஈன்றெடுத்த சொல்லுவதற்கு அருமையாக, விளங்கும் ஒரு கன்னிகையைச் செல்வம் மிகுதியாகச் செலவு செய்யும் திருமணத்தைப் புரிந்து கொண்டான்." பாடல் வருமாறு :

அப்பதி தன்னில் ஏறி

. அலகில்பல் பொருள்கள் ஆக்கும் ஒப்பில்மா கிதியம் எல்லாம்

ஒருவழிப் பெருக உய்த்து மெய்ப்புகழ் விளங்கும் அவ்வூர்

விரும்பஓர் வணிகன் பெற்ற செப்பரும் கன்னி தன்னைத்

திருமலி வதுவை செய்தான்.'

அப்பதிதன்னில் - அந்தச் சிவத்தலமாகிய நாகப் பட்டினத்தில். தன் : அசைநிலை. ஏறி . தான் ஏறிச் சென்ற கப்பலிலிருந்து கரையில் அந்தப் பரமதத்தன் ஏறிக் கொண்டு. அலகு - கணக்கு. இல் - இல்லாத கடைக் குறை, பல் பல. பொருள்கள் - செல்வங்களை. ஆக்கும் - உண்டாக்கும். ஒப்பு - சமானம், இல் - இல்லாத; கடைக்குறை. மா - பெரிய, நிதியம் - நிதியங்கள்; ஒருமை பன்மை மயக்கம். எல்லாம் - எல்லாவற்றையும். ஒரு. வழி . ஒரு வழியில். ப் : சந்தி. பெருக - பெருகி வருமாறு. உய்த்து. அந்தக் கப்பலைச் செலுத்தி. மெய். உண்மை யாகிய, ப் : சந்தி. புகழ் விளங்கும் . புகழ் திகழும். அவ்வூர் - அந்த நாகப்பட்டினமாகிய ஊரில் வாழும். மக்கள் : இட ஆகு பெயர். விரும்ப - விழையுமாறு. ஓர் . ஒரு. வணிகன் - வைசியன். பெற்ற ஈன்றெடுத்த, செப்பரும் - சொல்வதற்கு அருமையாக விளங் கும். செப்பு . சொல்லுதல். கன்னி தன்னை - ஒரு கன்னிகையை. தன் : அசைநிலை. கன்னி - மணமாகாத பெண் ம னி.