உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சபாடாணம்

அஞ்சபாடாணம்

அக. அனு.)

பெ. பிறவிப்பாடாண வகை. (செ. ப.

அஞ்சபாதம் பெ. 1. அன்னப்புள்ளின் அடி. (சங். அக.) 2. புள்ளடிக் குறி. (வின்)

அஞ்சம்1 பெ. அன்னம். அன்னம் எகினம் அஞ்சம் ஓதிமம் (பிங்.2311). அஞ்சிறைய அஞ்சம் (திரு வரங். அந். 28). அஞ்சத்து நடை. (கல்வளை அந். 5). அஞ்சம் பல பயில்தரும் (குசே.363).

...

அஞ்சம்' பெ. வெள்ளை எருது. அஞ்சம் வெள்விடை (நாநார்த்த. 175).

அஞ்சம்' பெ. (புறத்தே ஒலிக்காமல் மனத்திற்குள் உச்சரிக்கப்படும் மந்திரம்) அசபாமந்திரம். அஞ்ச மந்திரத்து நீறு பூசியே தரிக்க (திருக்காளத். பு. 26, 13). காயத்திரி அதனின் அதிகம் அஞ்சமா மந் திரம் (சிவஞா.. காஞ்சி. திருவேக. 28).

அஞ்சம் பெ. சன்னியாசம் நான்கனுள் ஒன்று. குல வுறு குடீசகம் பகூதகம் அஞ்சம்... பரமவஞ்சமே என்ன நான்கு (சூத. ஞானயோக. 6, 2).

...

அஞ்சம்' பெ. பிராணவாயு அஞ்சம் ... பிராணவாயு (நாநார்த்த. 175).

அஞ்சம்' பெ. கூறு, அம்சம். (செ. ப. அக.)

அஞ்சம்பு பெ. மன்மதனுக்குரிய தாமரை, மா, அசோகு, முல்லை, நீலம் என்னும் ஐவகை மலர்க்கணைகள். அஞ்சம்பையும் ஐயன் தனது அலகம்பையும்

அளவா (கம்பரா. 2,6,3).

அஞ்சமிருகல் பெ. சிற்றரத்தை. (செ. ப.அக. அனு.)

அஞ்சமுது பெ. பஞ்சாமிருதம். அஞ்சமுதாம் உப சாரம் எட்டெட்டோடும் (திருமந். 1827).

அஞ்சயானம் பெ. அன்னவாகனம். அஞ்சயானமேற் சார்ந்தாள் (தேவிமான். 8,8).

அஞ்சராணி பெ. வண்டியில் இருசுக்கட்டையைப் பாரோடு பிணைக்கும் இருப்பாணி. அஞ்சராணி ஒடிந்துவிட்டது (தென்னார். வ.).

98

அஞ்சல்தா(தரு)-தல்

அஞ்சருள் பெ. ஐவகைச் சக்தி. அஞ்சருளைப் போற் றிச் சிந்தை செய்வாய்

...

நெஞ். பு. 11).

(பட்டினத்தார். அருட்பு.

அஞ்சல்1 5வி. (அஞ்சு{தல்} + எதிர்மறை விகுதி - அல்) அச்சம் கொள்ளாதே. இவட்கே அஞ்சல் என்ற இறை கைவிட்டென (நற். 43,8).

அஞ்சல்

ஓம்புமதி (முருகு. 291). அஞ்சல் என்று அடித் தொண்டனேற்கு அருள் (தேவா. 7, 48, 5). உய்ந் தனை ஆகுதி அஞ்சல் நீ என (பெருங்.3,20, 114). அஞ்சல் சிலபகல் கழிந்து காண்டி (சீவக. 1131). அஞ்சல் அஞ்சல் என்இலாத ஆண்மை (கம்பரா. 1,12, 49). அஞ்சல் என்ற கரதலமும் (தனிச். சிந்.

வரதுங். 1).

அஞ்சல்' பெ. அச்சம். அஞ்சல் இல் தானை வேந்தே (சூளா. 531).

அஞ்சல்' பெ. சோம்பல். அஞ்சல் ... சோம்பலாகும் (திவா. 1675).

அஞ்சல்

பெ. தோல்வி. தோற்றல் அஞ்சல் தோல் விப் பெயர்

(பிங். 1864).

அஞ்சல்' பெ. 1. நீண்ட பயணம் செய்வோர் ஓய் வெடுக்க இடையில் தங்குவதற்குரிய இடம், கடி.(பே.வ.) 2. (பண்டு) தபாலை ஒவ்வொரு கடியாகச் சென்று மாற்றிக் குறிப்பிட்ட இடத்தில் சேர்க்கை. ஓலை பிடித்து அஞ்சலிலே ஓடி (மாதை. பணவிடு.281). 3.கடிதம், தபால். எனக்கு அஞ்சல் வந்தது (பே. வ.). 4.விரைவு. போய் ஒரு அஞ்சலில் திரும்பி வருகிறேன் (ரா. வட். அக.).

அஞ்சல்' பெ. வானொலி அல்லது தொலைக்காட்சி யில் நிகழ்ச்சிகளை ஒரு நிலையத்திலிருந்து பெற்று மற்றொரு நிலையம் அனுப்புகை. இந்த நிகழ்ச்சி சென்னை அஞ்சல் (புதிய வ.).

அஞ்சல்செய் -தல் 1 வி. வானொலி அல்லது தொலைக் காட்சி நிலைய நிகழ்ச்சிகளைப் பிறிதொரு நிலையத் திலிருந்து வாங்கி அனுப்புதல். இசை நிகழ்ச்சியைச் சென்னையிலிருந்து அஞ்சல் செய்கிறோம் (புதிய வ.). அஞ்சல்தலை பெ. அஞ்சல் கட்டணத்திற்குரிய வில்லை. க்கடிதத்திற்கு அறுபது அறுபது காசு அஞ்சல் தலை ஒட்டு (புதிய வ.)

அஞ்சல்தா(தரு)-தல் 13 வி. 13 வி. அச்சம் தவிர்த்து உதவி யருளுதல். அடைக்கலங்கொண்டு அஞ்சல் தந்து (தேசிகப்2,9).