பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறைபிறந்த
இறை மாதம்


‘ஈதுல் ஃபித்ர்’ எனும் ஈகைத் திருநாள்!

உலகமக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினரான முஸ்லிம் பெருமக்கள் ஈதுல் ஃபித்ர் பெருநாளை ஈகைத்திருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஒவ்வொரு முஸ்லிமும் ரமளான் மாதம் முழுமையும் நோன்பிருந்தும் அதிகமான தொழுகைகளை நிறைவேற்றியும் தாங்கள் உழைத்துத் தேடிய பொருளை இரண்டரை சதவிகிதம் பங்கிட்டுப் பிறருக்குத் தான தருமமாக ஜகாத் வழங்கியும் ஃபித்ரா எனும் தானத்தைத் தந்தும் ஒரு மாத காலம் ஒருவித தவ வாழ்வை நடத்திய பின்னர் வெற்றிக் களிப்புடன் இந்நன்னாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் ‘ரமளலான்’ மாதம் மட்டுமே திருமறையாகிய திருக்குர்ஆனில் அல்லாஹ்வால் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இம்மாதம் இறை மாதமாகக் கருதிப் போற்றப்படுகிறது.

இம்மாதத்தில் தான் இறை வேதம் முதன் முதலாக வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) மூலம் இறுதி இறை