பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

113

யாததோடு தீய உணர்வே நெஞ்சத்தில் எழ இடமில்லா மலும் போகிறது.

நோன்பில் மற்றொரு சிறப்புத் தன்மையும் உள்ளது. தொழுகை, ஜகாத், ஹஜ் போன்றவை வெளிப்படையாக நிகழ்த்தப்பெறும் கடமைகளாகும். இவற்றைப் பலரும் அறியவும் காணவும் இயலும். ஆனால், நோன்புக் கடமையானது நோன்பாளிக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிந்த கடமையாக அமைந்துள்ளது. ஸஹர் (வைகறை)யில் உண்பதும் அந்தியில் நோன்பை முடிப்பதும் வேண்டுமானாலும் மற்றவர்கள் அறிய நிகழும் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், பகல் முழுமையும் தொடர்ந்து நோன்பு நோற்பது இறைவனுக்கும் நோன்பாளிக்கும் மட்டுமே தெரிந்த செயலாக உள்ளது. இறைவனின் பார்வையினின்றும் தான் கடுகளவும் தப்ப இயலாது என்ற உணர்வுடன் நோன்பை முறிக்கும் எச்செயலையும் எக்காரணம் கொண்டும் செய்யாமல் தனக்குத்தானே கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு நோன்பை முழுமையாக நிறைவேற்றுகிறான். இதனால், இடையறா இறைச் சிந்தனையும் இறையச்ச உணர்வும் அவன் உள்ளத்தை முழுமையாக ஆட்கொண்டு விடுகிறது. இதன் மூலம் இறைச் சட்டத்தை இம்மியும் பிசகாமல் பின்பற்றும். பேராளனாக ஆகிறான். இதையே திருமறை: “நம்பிக்கையாளர்களே நீங்கள் “முத்தகி” (இறைவனுக்குப் பயந்து அவன் கட்டளையைப் பின்பற்றுவோராகவும்) ஆக வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முந்தியவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது” (2:183) எனக் கூறுகிறது.

மனிதரைப் புனிதராக்கும்
நோன்பு

நோன்பு மனிதனைப் புனிதனாக உருமாற்றும் ஒப்பற்ற பணியையும் செய்கிறது. நோன்பு தவிர்த்து மற்றைய