பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

இஸ்லாமியக் கடமைகள் குறிப்பிட்ட குறுகிய கால எல்லைக்குள் முடிந்து விடுகின்றன. சான்றாக, தொழுகை குறிப்பிட்ட நேரங்களில் ஒரு சில நிமிடங்களுக்குள் முடிந்து விடுகின்றது. ஜகாத்தும் ஒரு சில நாட்களுள் முடிந்து விடுகின்றது. ஹஜ் கடமை பெரும்பாலோர்க்கு வாழ்வில் ஒரு முறையோடு முற்றுப் பெற்று விடுகிறது. ஆனால், நோன்போ ரமளான் மாதம் முழுமையும் தொடர்ச்சியாக நோற்கப்படுகிறது. ரமளான் மாதம் முழுமையும் தராவீஹ் எனும் சிறப்பு இரவுத் தொழுகை தொடர்ந்து தொழப்படுகிறது. எவற்றைச் செய்ய வேண்டும், எவற்றைச் செய்யக் கூடாது என இஸ்லாம் விதித்துள்ளதோ அவ்விதி முறைகள் கண்டிப்புடன் முற்றாக நிறைவேற்றப்படுகின்றது. இக்கடுமையான ஒரு மாதப் பயிற்சி அடுத்துள்ள பதினொரு மாதங்களும் தவறாது கடைப்பபிடிக்கும் பழக்கமாக அவனிடம் அழுத்தமாகப் பதிந்து விடுகிறது. பன்னிரண்டாவது மாதத்தில் மீண்டும் அதனைப் புதுப்பிக்கும் வகையில் அதே ரமளான் மாத நோன்பை நோற்கும் பயிற்சியை மேற்கொள்கிறான்.

இவ்வாறு ஒரு முஸ்லிம் வாழ்நாள் முழுமையும் இறை நெறிகளைக் கட்டுப்பாட்டுடனும் கண்டிப்புடனும் கடைப் பிடிக்கும் இறையாண்மையாளனாகச் செயல்பட உறுதுணை புரிகிறது ரமளான் நோன்பு. அத்துடன் பொறுமையைப் பேணி நடக்கவும் பசித்துன்பத்தை எதிர்த்துப் போராடும் மனத்துணிவைப் பெறவும் மன இச்சைகளை அடக்கும் மாமருந்தாகவும் ரமளான் நோன்பு அமைகிறது.

பிறர் துன்பம்
போக்கும் பேராண்மை

பசியின் கொடுமையையும் தாகத்தின் தகிப்பையும் நாள் முழுவதும் உணரும் நோன்பாளி பிறர் பசி போக்குவதில் நாட்டமுடையவராகிறார். மற்றவரின் வறுமைத்