பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நபிகள் நாயகம்
காட்டிய இஸ்லாம்


உலகெங்கும் உதித்த
நபிமார்கள்

இஸ்லாமியக் கோட்பாட்டின்படி, இறை தந்த திரு மறையின்படி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, இறைநெறியில் இட்டுச் செல்ல ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களை வழிகாட்டும் ஒளி விளக்குகளான தீர்க்கதரிசிகளை இவ்வுலகுக்கு இறைவன் அனுப்பியுள்ளான். இவர்கள் பிறவாத நாடில்லை; இனமில்லை; மொழியில்லை. எல்லா மொழியிலும் நாட்டிலும் இனத் திலும் இவர்கள் தோன்றி மக்களை இறை நெறி வழி நடத்தியிருக்கிறார்கள்.

ஒருவர் புத்தரை மட்டும் ஏற்றுக் கொண்டால் பெளத்தராகி விடலாம். ஈசா (அலை) அவர்களை மட்டும் ஏற்றுக் கொண்டால்போதும் கிருஸ்தவராகி விடமுடியும். ஆனால், அண்ணல் நபி (சல்) அவர்களை மட்டும் ஏற்றுக் கொண்டால் ஒருவர் முழுமையான முஸ்லிமாகி விட முடியாது. அவனியெங்கும் பல்வேறு கால கட்டங்களில் தோன்றி, மக்களுக்கு இறைவழியில் நேர்வழிகாட்டிச் சென்ற ஒரு இலட்சத்து இருபத்தி நான்காயிரம் நபிமார்