பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

விற்பனை செய்யும் ஒரு நல்ல முஸ்லிம் வியாபாரியாக மணவை முஸ்தபா திகழ்கிறார். என்னை அறியாமலே முஸ்தபா பாயிடம் என் சிந்தனையை அடகு வைத்து விட்டேன் போங்கள் !

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் காணப்படும் தீர்க்கர்களின், சமயப் பிதாக்களின் விளக்கங்களும் இஸ்லாமிய வேதமான திருக்குர்ஆனில் வரும் வினாக்களும் ஒரே மூலத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளவை யென்பதை இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் மறுக்க மாட்டார்கள். மனிதக் கோடிகளின் மூலப்பிதா ஆதாமும் அன்னை ஏவாளும் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் பொதுவானவர்கள் என்ற கருத்தும் உலகின் மூன்று பெரிய சமயங்களான யூதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகியவற்றுக்கு விசுவாசத் தந்தையாக திகழ்பவர் ஆபிரகாம் என்பது இச் சமயத்தவர் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மையாகும்.

அனைத்துப் படைப்புகளுக்கும் காரணம் ஒரே இறைவன் என்பதையும் அவன் படைத்த மனிதர்களிடையே பிறப்பால், நிறத்தால், வாழும் நாட்டால், செய்யும் தொழிலால், பேதம் கற்பிப்பது இறைவிருப்பத்திற்கு முரண்பட்டது மட்டுமல்லாமல், மனித சமுதாயத்தின் மாண்பிற்கே மாசு கற்பிக்கும் செயல் என்பதனையும் ஆசிரியர் திருக்குர்ஆன் திருவசனங்களில் இருந்து மேற் கோள்காட்டி படிப்போர் சிந்தனைக்கு அருமையான முஸ்லிம் பிரியாணி படைக்கின்றார்.

இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும் எதிரானது அல்ல என்பதனை ஆசிரியர் வலியுறுத்துகின்றார்.

பிறசமய நம்பிக்கை, வழிபாடு, பாரம்பரியங்களை எள்ளி நகையாடுவது என்பது இஸ்லாத்திற்கு முற்றிலும்