பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெருமானார் போற்றிய
எளிமையும் சிக்கனமும்


அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் பிறந்த நாள் விழா நானிலம் எங்கும் உள்ள மக்களால் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகெங்கும் வாழும் 125 கோடி முஸ்லிம்களும் பிறரும் பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் நினைவு கூர்ந்து போற்றுகின்றனர்.

போதித்தவர் மட்டுமல்ல
வாழ்ந்து காட்டியவர்

அண்ணலார் பெருமானார் (சல்) அவர்கள் இறை நெறியை மட்டும் போதிக்க வந்தவர் மாநபி அன்று. மறை கூறும் இறை நெறியை மனித குலத்துக்குச் செயல் வடிவில் வாழ்ந்து காட்டவும் வந்தவராவார். ஆகவே தான், இறைவன் தன் திருமறையில் “அவனிக்கோர் அருட்கொடையான அண்ணலாரை அழகிய முன்மாதிரியாக இவ்வுலகுக்கு அனுப்பியுள்ள”தாகத் தன் திருவேதமாகிய திருக்குர் ஆனிலே கூறியுள்ளான்.

எளிமைச் சிறப்பும்
சிக்கனப் பண்பும்

அண்ணலாரின் வாழ்க்கையின் எந்தப் பகுதியைப்