பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

கொண்டிருக்கிறார். இஸ்லாமிய நூல்களை நன்கு படித்து அறிந்தவரும், நடுநிலை கொண்ட மனத்தைக் கொண்ட வருமான முஸ்தபா, அவர் சார்ந்திருக்கும் இஸ்லாம் மார்க்கத்தின் நெறிகளையும், அவற்றிற்குப் பின்னுள்ள தத்துவங் களையும் வேறு மதத்தினரும் விளங்கிக் கொள்ளும் வகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. ரம்சான் ஏன் கொண்டாடப்படுகிறது? பக்ரீத்தின் பின்னணி என்ன? பிற மதங்களைப் பற்றி நபிகள் நாயகத்தின் கருத்து என்னவாக இருந்தது? இஸ்லாமிய மறை எவ்வாறு பிறந்தது? என்று பற்பல விஷயங்களை இந்தக் கட்டுரைகள் எடுத்து சொல்கின்றன. அவற்றின் முத்தாய்ப்பாக சமய நல்லிணக்கத்திற்கு தடையாக இருப்பது எதுவென்றும், முஸ்தபா தனக்கே உரிய பாணியில் விவாதிக்கிறார்.

இந்த நூலிலுள்ள கட்டுரைகளில் பெரும்பான்மை யான கட்டுரைகள். 22-ல் 12 தினமணியில் வெளியானவை. இந்த வகையில் முஸ்தபாவின் நடுநிலைமைக்கு மட்டுமின்றி தினமணியின் நடுநிலைமைக்கும், மதச்சார்பின்மைக்கும் கூட இந்த நூல் ஒரு சான்றாக விளங்குகிறது. முஸ்தபா அவர்கள் இத்தகைய நூல்களைத் தொடர்ந்து எழுதிவர வேண்டும் என்று விரும்புகிறேன். அத்தகைய முயற்சிகளில் அவருக்கு வெற்றிகிட்ட வாழ்த்துகிறேன்.

சென்னை - 2
ஜூலை 21, 1993

மாலன்
‘தினமணி’ ஆசிரியர் நாளிதழ்