பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மவ்லானா எம்.அப்துல் வஹ்ஹாப் எம்.ஏ, பி.டிஹெச்
ஆய்வுரை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
நஹ்மதுஹ வ நுஸல்லீ அலா ரஸுலிஹில் கரீம்

அல்ஹாஜ் கலைமாமணி மணவை முஹம்மது முஸ்தபா அவர்களின், “பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்,” என்னும் இச்சீரிய நூலை சிந்தை குளிர ஊன்றிப் படித்தேன். திருக்குர்ஆனின் அறிவுரைப்படியும், அதன் விளக்கமாக வாழ்ந்த வள்ளல் நபிகள் நாயகத்தின் நடைமுறைகள், அருளுரைகளுக் கொப்பவும் இஸ்லாம் படைப்பினங்களிடையே இணக்கத்தையும், நேசத்தையும் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது பற்றி, முக்கிய இஸ்லாமிய விழாக்களின் அகமியங்கள் மூலமாக தெளிவுபடுத்தும் இந்நூல் மனித நேய வரலாற்றுப் பாட்டையில் ஒரு மைல் கல் ஆகும்.

இறைவன் தன் திருத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாயிலாக, அனைத்துலகும் கடைத்தேற அருள் செய்த மாமறை முக்கியமாக: “குர்ஆன்,” “அல்குர் ஆன்” என்று 69 இடங்களில் அதன் அகத்தேயே குறிக்கப்படுகிறது. அதன் விழுமிய பொருளை, ஆழிய கருத்தை முற்றும் எவரும் உணர்ந்து விட்டதாகச் சொல்ல இயலாது. சில இடங்களில் அது மறை பொருளாகவே (ESOTERIC) அமைகிறது.

“சொல்லாலே சொல்லப்படுமோ? சொல்லும் தன்மை துரும்பு பற்றிக் கடல் கடக்குந் துணிவே யன்றோ?”

(திருவாசகம்) என்னுமாப் போல், அதனை முற்றிலும் அறிய முனைவது என்பது துரும்பைப் பற்றிக் கொண்டு நீள்