பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பெருமானாரின் பிற சமயக்
கண்ணோட்டம்


நாளொன்றுக்கு ஒரு கோடி முறை
உலகெங்கும் ஒலிக்கும் பெயர்

உலகில் உதித்த மாமனிதர்களில் அண்ணல் முஹம்மது நபி (சல்) அவர்கள் பெயர் போன்று வேறொருவர் பெயர் இடையறாது மக்களால் உச்சரிக்கப்படுவதில்லை என்றே கூறலாம்.

நாள்தோறும் ஐந்து வேளைத் தொழுகைக்கென தொழுகை அழைப்புக்கான பாங்கு பள்ளிவாசல் தோறும் ஒலிக்கப்படுகிறது. அதில் வேளைக்கு இருமுறையாகப் பத்து முறை முஹம்மது என்ற அண்ணலார் பெயர் ஒலிக்கப் படுகிறது. உலகெங்கும் பத்து இலட்சம் பள்ளிவாசல்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். எனவே, ஒரு நாளைக்கு ஒரு கோடி தடவைகள் நபிகள் நாயகம் முஹம்மது நபி (சல்) அவர்களின் பெயர் இரவு பகல் எந் நேரமும் இடையறாது உலகெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவரது புகழ் நெஞ்சாரப் போற்றப்படுகிறது.

அனைத்துலகுக்கும் ஓர்
அழகிய முன்மாதிரி

மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும், அழகிய முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்த மனிதப் புனிதர்

3