பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மிகு பயன்
விளைவிக்கும் ரமளான்

இறைமறையாகிய திருக்குர்ஆன் பிறந்த ரமளான் மாதத்தின் இறுதியில் வரும் ‘ஈதுல் ஃபித்ர்’ எனும் ஈகைத் திருநாள் உலகெங்கும் வாழும் 125 கோடி முஸ்லிம்களால் உவப்புடன் கொண்டாடப்படும் பெருநாளாகும்.

இறை நம்பிக்கையாளர்களின் நெஞ்சகத்தில் ஆன்மீக எழுச்சியையும் ஈகையுணர்வையும் மனக் கிளர்ச்சியையும் உருவாக்கி, மனிதர்களைப் புனிதர்களாக்கும் இறை மாதமாகவும் ரமளான் மாதம் அமைந்துள்ளது.

திருக்குர்ஆனில் ‘ரமளான்’

இஸ்லாமிய மாதங்கள் பன்னிரண்டில் ஒன்பதாவது மாதமான ரமளான் மாதம் மட்டுமே இறைமறையாகிய திருக்குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது.

ரமளான் மாதத்தின் சிறப்பு திருக்குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ரமளான் மாதம் எத்தகைய (மகத்துவமுடைய) தென்றால், அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும்