– 64 - 316-318. வேள்வித் துனத்து - யாகத்து யூப்த்தம் பத்து. அசைஇ - தங்கி. யவனர் ஓதிம விளக்கின்- யவன தேயத்தாருடைய அன்னவடிவின் வாயிலிட்ட விளக்கனப் போலவும். உயர்மிசைக் கொண்ட வைகுறு மீனின் - உயர்ந்த வானத்தைக் கொண்ட விடியல் வெள்ளியாகிய மீனப் போலவும். மிசை - வானம், 'மிசை பாடும் புள் ளின்' (கலித். 46) என வானம்பாடிப் புள்ளினேக் கூறுதலான் அறிக பறவையின் வாயிற் கொத்திய பொலங்குழை யாதலாற் றரையிலுள்ள ஓதிம விளக்கினே யுவமை கூறினர். உயர்ந்த யூபத்தம் பத்துத் தோன்றுதலால் உயர்மிசை வெள்ளியை உவமித்தார். கோள்களேயும் மீனெனல் இந் நூலாசிரியர் வழக்கென்பது பட்டினப் பாலேயுள், நாண் மீன் விராய கோண் மீன் போல’ எனக் கூறியதன லுணரலாம். உரைகாரர் ஒதியம் காரன்னம் என்ருர். ஈண்டு அன்னவடிவன்றி நிறம் பற்றிய தாகாமை உணர்க. பைப்பயத் தோன்றும்தொடர்ந்து சுடர்விடாது மென் மெலத் தோன்றும். ஓதிம விளக்கு - கலங்கரை விளக்காகத் திபத் தம்பத்திட்டது என்க. தோன்றும் நீர்ப்பாயலெல்லைப் போகி என்க நீர்ப்பாயல் சலசயனம் என்று வழங்கியது; இது திருமால் பள்ளிகொண்ட தலமாகும். இவ்வுண்மை அவந்தி சுந்தரி கதையிற் றண்டியென்னும் ஆசிரியர்
பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/118
Appearance