பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 78 — அணிவராதலின் அவர் பறித்தற்குத் தக்க குறிய கால் கூறினர். மாதவியும் அவர் குடும் பூவாகும் தளிரும் பூவும் ஒரிடத்தே கிடைத்தல் குறித்தார். 376-880. கூவியன் காரகற் பாகொடு பிடித்த நூலிழை வட்டம்-அப்ப வாணிகன் கரிய அகலி லுள்ள வெல்லப் பாகொடு சேர்த்துப் பிடித்த நூற்ற இழை போன்றுள்ள தேங்குழ லுருண்டை. இழை போல் மெல்லிதாகவுஞ் சிறியதாகவும் பிழியப்பட்ட தல்ை தேங்குழல் நூலிழை யெனப்பட்டது. புறங் கரிய அகலிற் காய்ச்சிய பாகொடு பிடித்த வட்டம் என்க. பாகு அகலைவிட்டு வேருய்க் குளிர்ந்தால் உருண்டையாகப் பிடித்தல் இயலா தாகலின் காரகம் பாகொடு என்ருர், பாகொடு பிடித்த நூலிழை வட்டம் என்றதன லிஃது இடியப்பமாகா தென்க. அது பாகொடு பிடிப்ப தாகாமையும் உணர்க. நிழல் தாழ்வார் மணல்-நிழல் தங்கிய வார்ந்த மணலில். நீழல் ஒளியுமாம். "நிலவு மணல்" என்பது புறம் (17). நீர் முகத்து-நீர் தங்கிய இடத்து. இழை வட்டம் பால் கலந்தவை போல் உறைப்ப-தேங்குழ லுருண்டை பாலிற் கலந்தன போல் மலர்கள் வீழ்ந் தழுந்தும்படி. = புனலானது மரங்களின் காலேக் கழுவிச் சென்ற சோலைகள் தோறும் புனல் பெருகி மரங்களின் காலி னளவின் ஏறி வடிந்தது குறித்தார். கால் கழி இய என்பதனம் பொழில் தூய்தாயபடி குறித்தார்.