பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம். கடுஞ்சூல்-முதிர்ந்த குல் எனினும் ஈண்டைக்கு ஏற்கும். சூன் முதிர்தலால் உயர் மரங்களின் ஏறல் செல்லா மந்தி கவளங் கவரும் என்று களவினைப் .ெ பா று த் த ற் கு ஏதுக் காட்டினர். உணவை வெறுக்கும் யானேக்கு ஒர் கவளமின்மையாற் குறை யின்மையும் கடுஞ்சூன் மந்தி வயிறு கிறைதலும் கினைந்துகொள்க. குரங்கிற்குப் பண்ணியம் கல்கலிங் காவலந்திவிற் ருென்றுதொட்ட வழக்காதலான் இத னிச்செயல் பொறுத்தருளப்படுமென்க. பரிபாடலிற் "குரங்கருங்தும் பண்ணியங் கொடுப்போரும்' (19-38) என வருதலா னிவ் வுண்மை யுணர்க. இது நகர்ப்புறச் சோலே கூறியவாறு. திண்டேர் குழித்த் குண்டுநெடுந் தெருவின் - திண்ணிய தேர்கள் ஒ டு த லா ற் குழிக்கப்பட்ட பள்ளத்தினேயுடைய நெடிய தெருக்களையும். குழித் தற்கு வேண்டிய திட்பத்தாற் றேரின விசேடித்தார். படை தொலேவறியாமைந்து மலிபெரும் புகழ்க் கடைகால் யாத்த பல்குடி கெழிஇ-தான் தொட்ட மடை வறிதே தொலைதலறியாது மெய்யின் வலி மலிந்த பெரும் புகழின் எல்லே அளக்கப்படாது மறைந்த வீரக்குடிகள் பல நட்பிற் பொருந்தி. படை தொலேவறியாமையாம் கலத்தின் வேறலும் மைந்து மலிதலான் மெய்யின் வேறலும் குறித்தார். பட்டினப் பாலேயுள்ளும், 'கையினுங் கலத்தினும் மெய்யுறத் தீண்டி ... . பிகல் மொய்ம்பிளுேர் (பட்டினப். 70,711 என்பது காண்க.