உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 மறப்போர்ப் புல்ஜி காம்புடை நெடுவளர் வேங்கடத்து" எனவும், 'புல்லிய வேங்கட விறல் வரை (ஷை 203) (புறம்.385) இவன் எனவும் வருவன கொண்டறியலாம். 3வங்கடமலை தொண்டை நாட்டினதேயாக இப் பெருந் தமிழ் வள்ளலைத் தொண்டையன் என்றேனும் தொண்டையர் குடியினரென்றேனுஞ் சங்க நூல்கள் வழங்காமை நினைந்துகொள்க. இனி, இவ் வேங்கடம் ெ "வினை நவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழு மேற்றரு நெடுங்கோட் டோங்கு வெள் ளருவி வேங்கடத்து' (அகம். 213) எனவும், வென்வேற் றிரையன் வேங்கட நெடுவரை" (85) எனவுங் கூறலான் இப் புல்லிக்குப் பின்னே தாண்டையர் என்பார்க்கும் அவர் வழியினனாகிய திரையனுக்கும் உரியதாதல் அறிக. இவற்றிற் கியையவே நந்திக்கலம்பகத்தில் தெள்ளாறெறிந்த நந்தி பல்லவனை, 'வடவேங்கட நாடுடை மன்னர்பிரான்” (55) எனக் கூறுதல் காணலாம். இவற்றாற் றமிழ்ச் சிற்றரசனாகிய புல்லி என்பானுக் குரிய இவ் வேங்கடநாடு வென்றியால் இத் தொண்டையர் எனப்பட்ட பல்லவ குலத்தவராற் கவர்ந்து கொள்ளப்பட்டதே யாமென்று நன்கு துணியலாம். கடைச் சங்க காலம் பிற்பகுதியில் இவ்விழவுடை வேங்கடஞ் சூழ் நாடு திரையர்க்குக் தொண்டையர்க்கும் வென்றியால் உரியதாயிற்றென்று