பக்கம்:பெரும்பாணற்றுப் படை-ஆராய்ச்சியும் உரையும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 26 — ஆடுதற் கின்றியமையாத முழவுபோலச் சோறுண்ட தற்கு இப் புளிங்காடி இன்றியமையாமை குறித்தார். காடி வைத்த கலன்-முகவணையின் கழுத்தில் வைக் கப்பட்ட மிடா வென்றுங் கொள்வர். மூ க் கி ன் முகவர்ணயி லமர்ந்து மகவுடை மகடுஉ புறந்துரப்ப என்க. மகவுடை மகடூஉ என்றது அவள் எருது கண் மாட்டு அன்புடைமையும் துரத்தலில் வி கு ங் குறித்து நின்றது. மகடு தேர்ப் பகடு துரத்தல் வட காட்டிற்கும் ஒக்கும். கைகேசி தயரதற்குத் தேர் கடாவினுள் என்பர். பகடு புறங் துரத்தல்-பகட்டை முதுகிற் றட்டிச் செலச் செய்தல். கோட்டு இணர்கொம்பின்கனுள்ள பூங்கொத்துடன் வே ம் பி ன் எடுத்தலையுடைய இலையை நெருங்க வைத்தலாற் றழை விரவின கண்ணியையும் தோளினையும் யாக்கை யினையும் நிரம்பிய வலியினையுமுடைய மாக்கள் என்க. எடுத்தல் - உயர்த்தல் இதனுல் ஏடு-மேன்மை யாயிற்று. "எடுடைய மேலுலகு' ( தேவா. 539:2 ) என்பது திருப்பாட்டு. கச்சிளுர்க்கினியர் ஏட்டிலே மிடைந்த மகடு என மாற்றி யுரைப்பர். வேம்பினின ருடன் இலை மிடைந்த படலைக்கண்ணி மாக்கட்குக் கூறியது இவ்வுமனராகிய மாக்கள் தமிழ் மூவேந்த ருள்ளும் பாண்டியர் பரிசனம் எ ன் ப து தெரிய வேண்டி என்க. இதல்ை இவ்வமயத்துத் தமிழ்காட்டுப் பாண்டி யர் தலைமையராக விளங்குதல் குறிக்கொள்ளலாகும். இக்காலத்து வேங்கடகாடுடையரசர் பாண்டியற்குத் திறையிடுவாராயினர் என்பது: