பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா, கோவித்தனார் 95

7-2 உழுது உண்ணும் ஆயர் உறையுள் நலம்

இசை இன்பம் நுகர்ந்தவாறே மேய்புலத்தைக் கடந்து சென்றால், உழுதுண்ணும் ஆயர் வாழும் சிற்றுாரை அடைந்து விடலாம். ஊருள் புகுவதன் முன்னர்க் கண்ணில் படுவது, ஆனிரைகள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் தொழு. தொழுவில் விடப்படும் ஆனிரைகளுக்குக் காட்டுக்கொடு விலங்குகளால் கேடுவாராமை குறித்தும் அத்தொழுவைச் சுற்றிலும் முள் நிறைந்த மரங்கள் காடுபோல் நெருங்க வளர்க்கப் பட்டிருக்கும். அடுத்து ஊருள் புகுந்ததும் வரகு போலும் விளை பொருள்களைக் தொட்டி வைத்திருக்கும் குதிர்கள், கடந்து வந்த காட்டுப் பகுதியில் கண்டு வந்த யானைக் கூட்டத்தை நினைவூட்டுமளவு பருத்தும் உயர்ந்தும் உழுதுண்னும் ஆயரின் வளமார் வாழ்க்கைக்குச் சான்று பக்ர்ந்து நிற்கும். நெல்லரிசி தினை அரிசிகளை மூடிக்கொண் டிருக்கும் ஆடையைக் குற்றி அகற்றுவது போல், வரகு அரிசியை மூடியிருக்கும் ஆடையைக் குற்றி அக்ற்ற இயலாது. அதை அரைத்தே அகற்றுதல் இயலும். அதற்குப் பயன்படும் திரிமரம் எனும் இயந்திரமும் ஆங்கே இருக்கும். தோற்றத் தில், யானையின் கால் போல் காட்சி. தரும் அதை இயக்கிச் செயல் படுத்தும் மகளிர்க்கு நிழல் தரும் பொருட்டு, அம்மனை முற்றத்தில் பந்தலும் போடப்பட்டிருக்கும். வீட்டின் நெடுஞ்சுவர், வண்டிச் சக்கரங்களும், உழுகலப்பை களும் சார்த்தி சார்த்தி வெளிப்புறத்தில் தேய்ந்திருக்கும். உட்புறம், சமைக்க முட்டிய அடுப்பிலிருந்து எழும் புகை படித்து கருத்திருக்கும். வீடுகள் வரகு வைக்கோலால் வேயப் பட்டு, பருவ மழ்ை காலத்தில், வானத்தில் கொண்ட்ல் கொண்டலாக எழும் கருமுகில் போல் காட்சி அளித்துக் கவின் பெற்றுத் திகழும். அத்தகைய வீடுகள் நிறைந்த் ஆயர் பாடியுள் புகுந்து விட்டால், ஆங்கு அளிக்கப்படும் வரகரிசிச் சோறும் அவரைக் கொட்டைப் பொரியலும், உண்டவர் வாய் மனக்கும் என்றவர் அவை பற்றிச் சிறிதே விளக்கவும் .செய்தார்.