பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 115

(பகட்டுஆ ஈன்ற-காளைகளோடு கூடிய பசுபெற்ற கொடுநடைக் குழவி-வளைந்து வளைந்து நடக்கும் கன்றுகளைக் கட்டிய கவைத்தாம்பு தொடுத்த-தலை பிரிந்திருக்கும் தாம்பு எனும் கயிறு கட்டப்பட்டிருக்கும்; காழ் ஊன்று அல்குல்-கட்டுத்தறிகள் நடப்பட்டிருக்கும் அகன்ற இடத்தையும்; ஏணி எய்தா நீர் நெடும் மார்பின்-ஏணியிட்டு ஏறின்ாலும் எட்டாத மிகப் பெரிய வயிறு எனப்படும் நடுப்பகுதியையும், முகடு துமித்துஅடுக்கிய பழம்பல் உணவின்-தலையைத்திறந்து மேலே மேலே சொரிந்த பழைய நெல்லையும் உடைய, குமரி மூத்த கூடு ஓங்கு நல்இல்-இளமைநலம் கெடாமலே முதிர்ந்துபோன குதிர்கள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்; தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த -தச்சச் சிறுவர்களும் விரும்புமாறு பண்ணப்பட்ட ஊரா நற்றேர்-ஏறி ஊரப் பயன்படாமல் ஈர்க்கப் பயன்படும் சிறுதேரை உருட்டிய புதல்வர்-ஈர்த்துத் திரிந்த பிள்ளைகள்; தளர் நடை வருத்தம் வீட-தளர் நடையால் உண்டான வருத்தம் நீங்க அவர் முலைச் செவிலி அம் பெண்டிர்த் தழிஇப் பால் ஆர்ந்து-பால் சுரந்து நிற்கும் செவிலியராகிய சிறந்த மகளிரைத் தழுவிப் பால் உண்டு, அமளித் துஞ்சும் அழகுடை நல்இல்-பஞ்சணையில் துயில் கொள்ளும் அழகிய இல்லங்களையும் உடைய, தொல்பசி அறியா உலகில்தொடர்ந்து வரும் பசி அறியாத, துளங்கா இருக்கைகுடிபெயர நினையா மக்கள் வாழும் குடியிருப்புகளை உடைய, மல்லல் பேரூர்-வளம்மிக்க பேரூர்களில்; மடியின்-தங்குவீராயின்; மடியா வினைஞர்-சோம்பி இர்ாத உழவர்கள்; தந்த வெண்ணெய்வல்சிவிளைத்துத் தந்த வெண்ணெல் சோற்றை; மனைவாழ் அளகின் வாட்டொடு பெறுகுவீர்-தங்கள் மனையில் வாழும் கோழிப் பொரியலோடு பெறுவீர்கள்.) -