பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

8-4 மருதநாட்டுத் தொழில் வளம்

ஆலைகள் ஆக்கிக் குவிக்கும் செய்பொருட்களை வெளி’ நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், ஆலைகளுக்குத் தேவைப் படும் இயந்திரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி: செய்யவும் வேண்டியிருக்குமாதலின், ஒருநாட்டின் தொழில் நிலையங்கள், பெரும்ப்ாலும் அந்நாட்டின் கடற்கரையை ஒட்டியே அமைந்திருக்கும். அம்முறைக்கு ஏற்ப, திரையன் நாட்டு ஆலைகளும், மருத நிலத்து வய்ல்களைக் கடத்து, கடலைச் சார்ந்த நெய்தல் நிலத்தில் அடியிடும் பகுதியிலேயே அமைந்திருந்தன. - - - -- . . மருதநில வயல் வளத்தை-பேரூர் மக்களின் செல்வப் பெருக்கை-எடுத்துரைத்த புலவர், அப்பேரூரில், கோழிப் பொறியல் கலந்த வெண்சோறுண்டு காஞ்சி நோக்கிப் புறப் படும் பெரும்பாணன், அம்மருத நில எல்லையில் காண நேரும் ஆலைகள் பற்றிக் கூறத் தொடங்கினார். பெரும் பாணன், ஆலைகள் அமைந்திருக்கும் பகுதியை அணுகும் போதே, அவர்களை அச்சுறுத்தும் பேரொலி கேட்கும், அது, இரவு பகல் ஓயாமல், கரும்பில் சாறுபிழிந்து, காய்ச்சிக் தட்டியாக்கும் இயந்திரங்கள் எழுப்பும் ஒலியாகும். அவ் வொலி, பாணன் கடந்து வரும், மூங்கில்கள் காடுபோல் வளர்ந்திருக்க, அதன் குளிர்ச்சியால் ஈர்ப்புண்டு, பெருமழை பெய்யும் மலைநாட்டுப் பகுதியில், எதிர்ப்படுவார் அனை வரையும் தாக்கித் துயர் விளைவிக்கும் கொடுமை மிக்க புவியால் தாக்குறும் யானைக்கூட்டம் அஞ்சி எழுப்பும் பெருங்குரல் ஒலிபோல் இருக்கும். அது அறிந்தவர் அதனால், பெரும்பாணனுக்கு அதை அறிவித்து, அவ்வொலி கேட்டு அச்சுறாது சென்று, அவ்வாலைகளை அடைவீர் களானால், ஆலை உரிமையாளர்கள், கருப்பஞ்சாறும், கருப்பங்கட்டியும் தருவார்கள். உங்களில் யார் யார். எது எதை விரும்புவீர்களோ, அது உண்டு, செல்வீர்களாக என்று கூறினார். -