பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பெரும்பாணாற்றுப்படை ?

வார்த்தாற்போலும் செந்நிறம் வாய்ந்த செங்குவளையும், இளநீல நிறம் காட்டும் கருங்குவளையும், மற்றும், வேறு பன்னிற மலர்களும் மலர்ந்து மணம் வீசும். அக்குளத்தைக் காணும் உன் அகக் கண்முன், பெரும்பாண மலைநாட்டைக் கடந்து வந்தபோது, பெருமழை பெய்து ஓய்ந்த கருமுகில் அகன்ற வானில், ஞாயிறு தோன்ற, அஞ்ஞாயிற்றின் கதிர்கள். ஊடறுத்துப் பாய எழுநிறம் காட்டித் தோன்றிய வானவில் காட்சி தோன்றி, அவ்வின்ப நிலையில், நீ மகிழ்ந்து போவாய் அந்நிலையில், அம் மலர்களைப் பறித்திருப்பவர், திரையன் புகழ்பாட வந்திருக்கும் புதியவர் என அறிந்து உன்பால் அன்புகொண்டு, மலர்களுள், அன்றலர்ந்த மலர்களாகத் தேர்ந்து தருவர். மணம் நாறும் அம் மலர்களை மாலை யாகத் தொடுத்து அணிந்துகொண்டு, ஞாயிறு தோன்றும் விடியற்போதில் அந்தணர் குடியிருப்புள் புகுவீர்களாக”

என்றார்.

‘பச்சூன் பெய்த சுவல் பிணி பைங் தோல்,

கோள்வல் பாண்மகன் தலைவலித்து யாத்த நெடுங்கழைத் தூண்டில் நடுங்க நான் கொளி இக் கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப் பொதி இரை கதுவிய போழ்வாய் வாளை நீர்கணிப் பிரம்பின் நடுங்குநிழல் வெரூஉம் நீத்துடை நெடுங்கயம் தீப்பட மலர்ந்த கடவுள் ஒண்பூ அடர்தல் ஒம்பி, உறைகால் மாறிய ஓங்குயர் கனந்தலை அகலிடு வானத்துக் குறைவில் ஏய்ப்ப அரக்கு இதழ்க் குவளையொடு . முரண்பூ மலிந்த முதுநீர்ப் பொய்கைக் குறுநர் இட்ட கூம்புவிடு பன்ம்லர் பெருநாள் அமைத்துப் பிணையினிர் கழியின்

. . - (283–296)