பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 - பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

முதுநீர்ப் பொய்கை-நிறத்தால் வேறுப்ட்ட பல்வேறு மலர்களும் நிறைய மலர்ந்த, வற்றாத பழைய நீர் நிறைந்த குளத்தில்,குறுநர் இட்ட கூம்பு விடு பன்மலர்பூக் கொய்வார் உங்கள் முன்னே குவித்த, அரும்பு. மலர்ந்த பல மலர்களை; பெருநாள் அமையத்துபெருமைக்குரிய விடியற் போதில், பிணியினிர் கழிமின்சூடிக்கொண்டு செல்வீர்களாக. -

10-1 அந்தணர் அளிக்கும் விருந்து

வலைஞர் குடியிருப்பின் நீங்கி, திரையன் அரசிருக்கை யாம் கச்சி நோக்கிச் செல்லும் பெரும் பாணன், இடையில், அந்தணர் குடியிருப்பையும், காஞ்சி நாட்டுக் கடற்றுறை நகராம் நீர்ப்பாயல் துறையையும், வணிகர் வாழிடங் களையும், மாவும், பலாவும், வாழையும், தென்னையும் மலிந்த பெருமரச் சோலைகளையும், தண்டலை உழவர் உறையுள்களையும் கடந்து சென்ற பிறகே கச்சிநகர் அடைவராதலின், கச்சி நகர் பற்றி விளக்குவதன் முன்னர், இடைவழிச் சிறப்புகளை விளக்கத் தொடங்கி, முதற்கண் அந்தணர் குடியிருப்பு பற்றிய விளக்கத்தை மேற் கொண்டார். , - -

அந்தணர், தம் உற்றார் உறவினர் பால் அன்பு கொண் டிருப்பதோடு மட்டுமல்லாமல், உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களிடத்தும் அருள் கொண்டிருப்பதினாலேயே அந்தண்ர் என அழைக்கப்படுவர். அதனால், அது, அவர் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறிலும் தெற்றெனப் புலப்பட விளங்கும். அவர் மனையின் முன்புறத்தில் போடப்பட் டிருக்கும் பந்தலின் குறுகிய காலில் கட்டப்பட்டிருக்கும் கன்று ஒன்றே, அவர், எத்துணை அருள் நிறை உள்ளம் உடையவர் என்பதை விளக்கிவிடும். தாய்ப்பசு அளிக்கும் பால் அவ்வளவையும் தாமே கறந்து கொண்டு விடாது,