பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 145

பெரும்பாண! அதன் சிறப்பினையெல்லாம் கண்டு வியந்த வாறே கச்சிக்குப் புறப்படுவாயாக, என்றார்.

“வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றரும் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவின் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி உரவுநீர் அழுவத்து ஒடுகலம் கரையும் துறை பிறக்கு ஒழியப் போகி”

- - (346–351)

6@

வானம் ஊன்றிய மதலைபோல-வானம் விழாதபடி முட்டுக் கொடுத்து நிறுத்திய முட்டுக்கால் போல, ஏணி சாத்திய-ஏ ணி சாத்திய, ஏற்றரும் சென்னி-ஏறுதற்கு” அரிய உச்சியையுடைய, விண்பொர நிவந்தவிண்ணைத் தீண்டும்படி உயர்ந்த, வேயா மாடத்துகழியும், கற்றையும் கொண்டு வேயாமல், கல்லும், சாந்தும் கொண்டு கட்டப்பட்ட மாடத்தில், இரவின் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி-இரவில் கொளுத்திய விளங்கும் சுடர் காலும் விளக்கு, உரவுநீர் அழுவத்துபெருநீர்ப் பரப்பாகிய கடலில், ஒடுகல்ம் கரையும்-வழி தவறி ஒடும் கலங்களை அழைக்கும், துறை பிறக்கு ஒழியப் போகி-நீர்ப்பாயல்துறை பிற்படச்சென்று.

இபரு-10