பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கோவிந்தனார் ~ 147

காணத் துடிக்கும் மனவளம் படைத்த உழவர் பெருமக்களும் நிறைந்திருப்பர். அவர் வளர்க்கும் மரம், செடி கொடிகளுக்கு

இடையறாக் காவல் தேவை. சிறிது கண்ணயர்ந்தாலும், அவை களவாடப்பட்டு விடும். அதனால், அவர்கள், அவை வளரும் விளை நிலங்களிலேயே, தங்கள் வாழிட்ங்களையும் வகுத்துக் கொள்வர்.

அவர் வாழும் மனைகள், தென்னந்தோப்பிலும், மாந் தோப்பிலும் தனித் தனியாகக் கட்டப்பட்டிருக்கும். தென்னை மடல்களுள், வளமான மடல்களாகத் தேர்ந்து வெட்டிப், பச்சை நிறம் மாறிப் பழுப்பு நிறம் பெறுமாறு வதக்கி உலர்த்திப் பின்னிய கீற்றுகள் கொண்டு கூரை வேயப் பட்ட அக்குடில்கள், தொலைவிலிருந்து நோக்குவார்க்கு, உரல்போல் பருத்த கால்களையும், குன்றோ என ஐயுறத் தக்க உடலமைப்பையும் உடைய பருத்த யானையோ என ஐயுறத் தோன்றும்.

மனையின் முன் புறத்தில் மஞ்சளும், இஞ்சியும், இரு பக்கங்களிலும் மணம் நாறும் மலர்ச் செடிகளும் செழித்து வளர்ந்திருக்கும். மனையின் முற்றத்தே நின்று நாற்புறமும் நோக்கினால் ஒரு பக்கத்தில், பெரிய பெரிய பழங்கள் பல காய்த்துத் தொங்குவதால் தாழ்ந்து போன கிளைகளைக் கொண்ட வேர்ப்பலா நிற்ப்தைக் காண்லாம். மற்றொரு பக்கத்தில், உயர்ந்து வளராமல் குட்டையாகவே நிற்பதால், அம் மண்ணில் நிறைய வளரும் தாழையோ என மருளத் தக்க தென்னை, குலை குலையாகக் காய்த்து நிற்பதைக் காணலாம். பிறிதொரு பக்கத்தில் முற்றிய பெருங்குல்ைகள் நிலத்தைத்தொடநீண்டுதொங்கும் வாழைத் தோட்டத்தைக் காணலாம். சிறிது தொலைவில், பனை மரங்கள் சல சலக்கும் பச்சோலைகளுக்கிடையே, குலை குலையாகக் காய் விட்டு நிற்பதைக் காணலாம். - . .