பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கோவிந்தனார் x - 171

படைக் கலங்களை வடிக்கும் உலைக் களத்தில் எழும் ஒலி பறவைகளை உறங்காமல் செய்ய, அவ்வுலைக்களம் செய்து குவிக்கும் படைக்கலத் துணையால் பெற்ற பொற் கட்டிகள் தீண்டுவாரற்றுக் கிடந்து உறங்கும் நலம் கண்டு மகிழ்ந்தவாறே அரசவை புகுந்தால், ஆங்குத் திரையன் நடாத்தும் அறவழி ஆட்சி நலம் கண்டு பெருமகிழ்வு, எய்தலாம். : -

திரையன் அரியணையில் வீற்றிருக்கும் காட்சி, கீழ்க் கடலின் அடிவானத்தே தோன்றி, பேரொளி பரப்பியவாறே எழும் கானல் ஞாயிற்றின் காட்சியை நினைவூட்டும். அக்” கடற்க்ாட்சி, தொண்டைக் கொடியை அடையாளமாகக் கட்டி அவன்தாய் பீலிவளை, அவனைக் கலம் ஏற்றிக் கடல் வழி அனுப்ப, இடைவழியில் கலம் கவிழத் திரைவழி வந்து அரசோச்சும் திரையன் குடிப் பெருமையை நினைவூட்டி விடும். அந் நினைவுஅலையில் மிதந்தவாறே அவையை நோக்கின்ால், ஆங்கு வலியரால் நலிவுற்று முறை வேண்டி வந்தவர்களும், வறுமையுற்றுப் பொருள் வேண்டி வந்தவர். களும் குழுமி இருப்பதைக் காணலாம். . .

“திரையன், தம்முறை கேட்டுத் தக்க தீர்ப்பளிப்பன். தம் குறை கேட்டு, அது தீர்த்து வைப்பன். அதற்கேற்ற தகுதி களைக் குறைவறப் பெற்றவன். தன் முன்வந்து முறையிடு வார் கூறுவன கொண்டே, அவர் கூறாத உண்மைகளைக் குறிப்பினாலேயே ஐயம் திரிபு அற, உள்ளது உள்ளவாறே உணர்வல்ல அறிவுத் தெளிவுடைய்வன். அதுமட்டுமன்று; வந்து இரப்பார்க்கு வாரி வழங்குவது தன் பிறவிக் கடன் என்ற உணர்வும், அதற்கேற்ற வளமும் வாய்க்கப்பெற்றவன். தன் அவை வந்து நிற்பார்க்கு நடுவு நிலை பிறழா நீதி கிடைத்தல் வேண்டும்; வறுமை, இனி அவரைத் தொடரா வாறு வழங்க வேண்டும் என்ற அந்த உணர்வு எந்நிலையிலும் மங்கிப் போகாப் பேருள்ளம் உடையவன்’ என உளமார