பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

பரிசில் பெற்றுத் திரியும் நீ பாராட்டுவது, கடலிடையே புகுந்து, மாமர வடிவுற்றுக் கரந்து நின்ற குரனைக் கொன்ற வீரனும், அணிகள் பலபூண்ட இளம் அழகனுமான முருகனைப் பெற்றளித்த பெருமைக்குரிய வயிறுடையாளும், பேய்கள் எல்லாம் கூடி ஆடும் துணங்கைக் கூத்தையும் கண்டு களிக்கும் கன்னிப் பருவத்தாளும் ஆகிய உமை அம்மைக்குப் பேய் ஒன்று குறி கூறத் தொடங்கி; அவள் குலப் பெருமை, குணப் பெருமைகளைக் கூறுவது போல் நகைப்பிற்கு உரிய தாகும் என்றாலும் உமை அம்மையார், பேய் கூறும் குறியை யும் விருப்புடன் கேட்டு அப்பேய் வேண்டுவன எல்லாம் வழங்கி அருள் பாலிப்பது போல், அளக்கலாகாப் புகழ் வாய்ந்த திரையனும், நீ கூறும் புகழ் உரைகளை, உளம் உவக்கக் கேட்டு, உன் பால் பேரன்பு கொண்டு, நீ வேண்டு வன எல்லாம் வழங்குவன். - -

ஆகவே, பாராட்டு பயன் தருமோ என்ற ஐயுறவு விட்டுப் பாராட்டி, பாராட்டு முடிவில், உன் இடது தோளில் தழுவிக் கிடக்கும் பேரியாழை, இயக்குமுறை பிறழாது இயக்கி, யாழ்த் தெய்வத்திற்கு ஆற்ற வேண்டிய கடப் பாட்டு மரபு கெடா வகை, முதற்கண் இருகை கூப்பி வணங்கி, வாயாரப் போற்றிய பின்னர், திரையன் உள்ளிட்ட அவ்வவையில் இருப்பார் அனைவரும் இசை இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து போக, இசை எழுப்பி நிற்பா யாக! உன் பேரியாழ் எழுப்பும் இசை வழங்கிய பேரின்பம் நுகர்ந்த அளவே, திரையன் உன்னை முழுமையாக அறிந்து கொள்வன் என்றார். . . . . . . . .

பொறிவரிப் புகர் முகம் தாக்கிய வயமான்

கொடு வரிக்குருளை கொள வேட்டாங்குப், புலவர் பூண்கடன் ஆற்றிப், பகைவர்

கடிமதில் எறிந்து குடுமி கொள்ளும்