பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் . . - 179

வென்றி அல்லது வினை உடம்படினும் ஒன்றல் செல்லா உரவுவாள் தடக்கைக் கொண்டி உண்டித் தொண்டையோர் மருக! மள்ளர் மள்ள! மறவர் மறவ! செல்வர் செல்வ! செரு மேம் படுக! வெண்திரைப் பரப்பில் கடுஞ்சூர்க் கொன்ற பைம்பூண் சேஎய் பயந்த மாமோட்டுத் துணங்கையம் செல்விக்கு அணங்குகொடித்தாங்குத் தண்டா ஈகை கின் பெரும் பெயர் ஏத்தி, வந்தேன் பெரும! வாழிய நெடிது! என இடினுடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக் கடனறி மரபின் கைதொழு உப் பழிச்சி கின்நிலை தெரியா அளவ்ை’ . . .

(448–464) .

உரை :

புலவர் பூண்கடன் ஆற்றி-புலவர்களுக்குப் பொன் அணி பூட்டுதல் முதலாம் கடன்க்ளைக் குறைவற முடித்து, பொறி வரிப் புகர் முகம் தாக்கிய வயமான் - பொறிகளையுடைய வண்டுகள் மொய்க்கும் புள்ளிகள் பொருந்திய முகத்தினை உடைய யானையைத் தாக்கிய சிங்கம், கொடு வரிக் குருளை கொள வேட்டாங்கு - வளைந்த கோடுகளையுட்ைய புலிக்குட்டியைப் பாய்ந்து , கொல்ல விரும்பியதுபோல், பகைவர் கடி மதில் எறிந்துபகை மன்னர்களின் காவல் அமைந்த மதில்களை அழித்து, குடுமி கொள்ளும்-அம்மதிலகத்து அரசர்க்கு உரிய முடிக்கலம் முதலியவற்றைக் கைக் கொண்டு ஆங்கே முடி புனைந்து விழாக்கொண்டாடும், வென்றி அல்லதுவெற்றியை விரும்புவதல்லது, வினை உடம்படினும் - அப்பகையரசர் பணிந்து உடன்பாடு செய்து கொள்ள விரும்பினும்: ஒன்றல் செல்லா-அதற்கு ஒத்துர் கொள்ளாமைக்குக் காரணமான, உரவு வா