பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் - 13

காலம் வாழ்ந்தேன்; இன்னமும் உயிர் போகவில்லையே!” என்று வாழ்நாளை வெறுக்கும் வாய். பெற்றெடுத்த பெருமைக்குரிய தாயின் நிலை இது.

‘வாழும் நாளோடு யாண்டுபல உண்மையின் தீர்தல் செல்லாது என் உயிர் எனப் பலபுலந்து, கோல் காலாகக் குறும்பல ஒதுங்கி நூல் விரித்தன்ன கதுப்பினள், கண்துயின்று முன்றில் போகா முதர்வினள் யாய்.” • *

(புறம் 159)

வறுமைத் துன்பத்தால் வாடிய மேனி. இளம் மகவு இடைவிடாது உண்டு உண்டு உலர்ந்து போன கொங்கைகள்: குப்பைமேட்டில் தாமே முளைத்திருக்கும் கீரைத் தண்டு களில், முன்பு கொய்த இடத்தில் தளிர்த்த புதிய தளிர் களைக் கொய்து வந்து, உலையில் உப்பு இடாமல் இட்டு ஆக்கிய கீரையல்லது, சோறும் மோரும் காணா உணவு. அழுக்கேறி அளவின்றிக் கிழிந்து போன ஆடை, தன்னையும் தன் குடும்பத்தினரையும் வறுமையில் வாடவிட்ட தெய் வத்தை வைது கொண்டேயிருக்கும் வாய். மனைக்கு மங்கல மாய் மாட்சி தர வந்த மனைக் கிழத்தியின் நிலை இது.

பசந்த மேனியொடு வருந்தி, மருங்கில் கொண்ட பல்குறுமாக்கள் - - பிசைந்து தினவாடிய முலையள், பெரிது அழிந்து

குப்பைக்கீரை கொய்கண் அகைத்த - . . . . . . முற்றா இளந்தளிர் கொய்து கொண்டு உப்பின்று நீர் உலையாக் ஏற்றி, மோர் இன்று . . . “ அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து - மாசொடு குறைந்த உடுக்கையள், அறம்பழியாத்

துவ்வாளாகிய என் வெய்யோள்”.

(புறம் 159)