பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

அந்நம்பிக்கை இல்லாதிருந்தால், இவன், தன் சுற்றத்தைக் கூட்டிக்கொண்டு, இக்கோடையில், இத்துணை தூரம் கால் அடுக் கலைத்து திரிய மாட்டான். எங்கோ, எப்போதோ இவனும் இறந்து போயிருப்பான்; இவன் சுற்றமும் மறைந்து போயிருக்கும். அவ்வாறு உயிரிழந்து போய்விடாது தன் பெரும் சுற்றத்திற்கு உறுதுணையாகி ஓடி வருகின்றான். ஆகவே, இவன் உள்ளத்திலும், உயிர் வாழ உறுதுணைபுரிய வல்லாரைப் பெறலாம் என்ற நம்பிக்கை உளது. ஆகவே, இவன் மனத் தடுமாற்றத்தை மாற்றி நம்பிக்கை ஊட்டி, நற்றுணை புரிவது இயலும் என்ற துணிவு பிறக்கவே, நின்று உரையாடும் ஆங்கே நிற்கும் ஒரு நெடிய குன்)ைப் பாணனுக்குக் காட்டி, பாண! நின்முன் காட்சி அளிக்கும் இக்குன்று, மழைதரு , முகிற்கூட்டத்தால் சூழ்ந்து கிடப்ப தற்கு மாறாக, வேனில் வெப்பம் தாளாது, வியன் ஞாலம் வியர்த்து வெளிப்படுத்தும் நீராவியால் சூழ்ந்து கிடக்கும் காட்சியைக் காணும் நீ, இவ்வுலகில் மழை நீர் என வாரி வழங்கும் வள்ளல்கள் மறைந்து விட்டாராக, புகை மண்டலம் போல் பிறர்க்குப் பயன்படல் ஆகா மக்கட்பதர் களின் வாழ்விடமாகி விட்டதே இவ்வுலகம்! இவ்வுலகில் பிறர் அளிக்கும் பரிசில் பெற்று பிழைப்பதல்லது, பிழைக்கும் வழி வேறு காணா எம்போல்வார் எங்ஙனம் வாழ்வோம்: என்றெல்லாம் எண்ணி எண்ணி வருந்துவை என்பதை யான் அறிவேன்; ஆனால், பாண! அவ்வாறு நம்பிக்கை இழக்க வேண்டுவதில்லை. பாணர்க்கும் பொருநர்க்கும் பரிசில் அளித்துப் புரக்குவல்ல பெரியோர் சிலர் இலைமறை காய் போல் ஆங்காங்கே இருப்பது உறுதி. இதோ பார்; வேனிற் கொடுமையால் மரங்களெல்லாம் வாடி நிற்கும் இக்காலத் திலும் பறவைகள் பெருங்கூட்டமாய்ப் பறந்து பறந்து திரிகின்றன என்றால், தமக்கு உணவாகிப் பயன் அளிக்க வல்ல பழ மரங்கள் சில், இவ்வேனிற் பருவத்திலும் எங்கேனும் இருக்கும். அவற்றைத் தேடிக் காண்பதே நாம் செய்ய வேண்டுவது என்ற நம்பிக்கையால் அன்றோ, அவை