பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 31

-ஒயாமல் பறந்து, தேடித் திரிகின்றன. அப்பறவைக் காட்சி, உன் உள்ளத்திலும் அந்நம்பிக்கையைத் தலை தூக்கச் செய்யவில்லையோ? கோடையின் கொடுமையுணராது. சேண்ெடும் தொலைவு சென்று பறக்கும் பறவைக்குள்ளது போலும் பறக்கும் வாய்ப்பு இல்லாததையும் பொருட் படுத்தாது. காடு என்றும் மேடு என்றும் கருதாது, மணல் என்றும் மடுவு என்றும் மருளாது, இரவு பகல் இருபோதும் ஒய்வின்றிக் கால்கடுக்க அலைந்து தேடினால் தளர்ந்தாரைத் தாக்கும் தண்ணளிமிக்காரைப் பெறலாம்; அந்நம்பிக்கை உடைமையால் நான் பெற்ற பயன்களும் பலவாம். நின் கவலை விடுத்து யான்கூறும் சிலவற்றிக்குச் சிறிதே காது கொடுப்பாயாக!’ என்ற தோற்றுவாயோடு வழித்துணை புரியத் தொடங்கினான். -: - -

தொடையமை கேள்வி இடவையின் தழீஇ வெந்தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் தண்கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப் பழுமரம் தேரும் பறவை போலக் & . 3. கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் . புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண1

(16-22)

(தொடை அமைகேள்வி-கட்டு அமைந்த கேள்விச் செல்வமாம் ஏழிசை எழுப்பும் பேரியாழை; இடவயின் தழிஇ-மார்பின் இடப்பக்கத்தில் வைத்து அணைத் துக் கொண்டு; வெந்தெறல் கன்வியொடு-கொடிய அழித்தல் தொழிலையுடைய ஞாயிறோடு மதி வலம் திரி தரும்-திங்களும் வலமாகத் திரியும், தண்கடல் வரைப்பில்-குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகி ல், தாங்குநர்ப் பெறாது-பொருள் அளித்துப் புரப்ப வரைப் பெறாமல்: பொழிமழ்ைதுறந்த - பெய்யும்