பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

வண்டிக் கூரைமீது வைக்கப்பட்டிருக்கும் கோழிக்கூடு; அக் கோழிக்கூட்டின் காட்சி, இடைவழியில், தங்கள் புனங் களில் விளைந்து முற்றியிருக்கும் தினையைக்காக்கும் கானவர். தினையை அழிக்கவரும் யானைக் கூட்டங் களைத், தொலைவில் வரும்போதே அறிந்து விரட்டுவதற் காகத் தங்கள் புனங்கள் இடையிடையே அமைத்திருக்கும் பரண்கள்மீது, நிழல்தர வேயப்பட்டிருக்கும் கூரையை நினைவூட்டும். நெடுவழி செல்ல சேர்வதால், ஊர் அற்ற இடைவழியிலும் உணவு ஆக்க நேரிடுமாதலின், அவ்விடங் களில், நெல்லையும் வரகையும் குற்றி அரிசி ஆக்குவதற்கு உதவும் உரல் கிடைப்பது அரிதாகிவிடும் என்பதால், தவறாது உடன்கொண்டு செல்லும் கல் உரலை அக்கோழிக் கூட்டின் வாயிலில் கட்டித் தொங்கவிட்டுச் செல்வர். அவ்வுரல் காட்சி, கடந்துவந்த வழியில் தான்கண்ட பெண் யானையிள் முழங்காலை நினைவூட்ட, பரிசில்பெற்று மீள்வோன், அப்பிடியானையின் முழங்கால் அழகு, அதன் உடலின் கருநிறம், அதன் வாயின் இருபுறமும் முளைத்து மூங்கில் முளைபோல் சிறிதே வெளிப்பட்டுத்தோன்றும் தந்தம் ஆகிய காட்சி நலன்களில் சிறிதே மயங்கி இருந்து விட்டு மேலும் தொடர்ந்தான். அவ்வண்டியைக் காண்டார். கண்களில் தப்பாது படும் மற்றொரு பொருள் செல்லும்: இடங்களில் இன்றியமையாது வேண்டப்படும் ஊறுகாய். நிறைந்த மிடா. அம்மிடா, வண்டியின் மூக்கணை அருகே கட்டிவிடப்பட்டிருக்கும். பரிசில் பெற்றும் மீளும் பாணன்: காட்டுவழியை மட்டும் கண்டு வருபவன் அல்லன். தொண்டை நாட்டுப் பேரூர்களில் பலநாள் இருந்து வந்தவன். அதனால், அப்பேரூர் ஆடரங்குகளில் நிகழும் ஆடல்பாடல்களை அறிந்து வந்தவன். அவை, அவன் உள்ளத்தில் பசுமையாகவும் இருந்தன. அதனால், மேற்: புறத்தில் வரிசையாகப் பின்னப்பட்ட கயிற்றின் அகத்தே அகப்பட இட்டு வைத்திருக்கும் அம்மிடாக் காட்சி, பரிசில் பெற்று மீள்வோன் உள்ளத்தில் வார்கொண்டு வரிச்ை