பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

- வழி, காவல் மிகுந்தது என்பதை வலியுறுத்த வணிகச் சாத்தோடு செல்லும் படைவீரர் இயல்பை எடுத்துக்கூறிய புலவர், அப்படை வீரர் துணை வர, வாணிகப் பெருநகர் நோக்கிச் செல்லும் வணிகர் இயல்பையும் எடுத்துக்

கூறினார். மிளகு உப்பு போல் கனமுடையது அல்ல ஆதலாலும், சிறிய அளவுள்ள பொதிக்கே பெரு முதல் வேண்டுமாதலாலும், மிளகு வணிகர்க்கு, மிளகுப் பொதி களைக் கொண்டு செல்ல, உப்பு வணிகர்க்குத் தேவைப் பட்டது போல், பெரிய பெரிய வண்டிகள் தேவைப் பட்டில. மேலும், மிளகை, அதுவிளையும் மலைநாட்டு உட்பகுதிக்கும் சென்று கொள்முதல் செய்யவேண்டிவரும். அத்தகைய இடங்களுக்கு வண்டிகள் செல்வது இயலாது.

அதனால் மிளகு வணிகர், தம்பொதி வண்டிகளில் கொண்டு செல்வதை விரும்பாது, கழுதைகளின் முதுகின்மீது கொண்டு செல்வதையே விரும்புவர். கழுதை பெரும்பாரம் சுமக்கக்

கூடியது; மலைக்காடுகளின் ஊடே நுழைந்து நுழைந்து செல்லக்கூடியது. அதனால் கழுதைகளே ஏற்புடையவை என எண்ணினர். பொதி சுமப்பதற்கென்றே பிறந்தவை போல், கழுதைகளின் முதுகு இ யல் பா. க வே வளைந்திருக்கும். மேலும் பொதி சுமந்து சுமந்து தழும்பேறி யிருக்கும். கழுதையின் அத்தகைய வளைந்த முதுகில், இரு

பக்கமும் எடை ஒத்திருக்கப் போடப்பட்டிருக்கும் மிளகுப்

பொதிக்காட்சி, புலவர் உள்ளத்தில், மலைநாட்டில் தாம், கண்டு வந்த ஒரு வேர்ப் பலாமரத்தையும், அதன் வளைந்த கிளை ஒன்றில் இரு புறமும்

காய்த்துத் தொங்கிக் கிடந்த இருபலாக் கனிகளையும்

நினைவிற்குக் கொண்டுவரவே-வேர்ப்பலாவாதலால், மரம்

ஏறவேண்டிய முயற்சியும் தேவைப்படாது, எளிதில் பறிக்கக் கிடைத்தமையால், ஒரு பழத்தைப் பறித்துப்

பிளந்து, எண்ணிக்கையில் சிலவே ஆயினும், உருவில் பெரிய வாக இருந்த சுளைகளைத் தின்றுவந்த இனிய உணர்வுக்கும். சிறிது பொழுது ஆட்பட்டுவிட்டார்; மீண்டும் தம் நினைவு