பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிs தனார் 61

தோளையும்; கடம்பு அமர் நெடுவேள் அன்ன-கடம்ப மரத்தடியில் விற்றிருக்கும் முருகனை ஒத்த மீளிஅண்டினாரை, ஆபத்தினின்றும் மீட்கும் பேராற்றலை யும்; உடம்பிடித் தடக்கை-வேலேந்திய பெரிய கையினையும் உடைய, ஒடாவம்பலர்-போரில் பின்னி டாத பேராற்றல் வாய்ந்த வீரர்கள்; தடவு நில்ைப் பலவின்-வளைந்த தோற்றத்தை புடைய பலா மரத் தின் முழு முதல் கொண்ட-அடிமரத்தில் குலை. கொண்ட, சிறுசுளைப் பெரும் பழம் கடுப்ப-சிறிய, சிறிய,சுளைகளைக் கொண்ட பெரிய பழத்தை ஒப்ப; மரியல் புணர்ப்பொறை தாங்கிய-மிளகின் இருபுறமும் சரி எடையுடையவாகக் கட்டிய சுமையைத் தாங்கிய, வடுஆழ் நோன்புறத்து-வடு அமைந்த வலிவு மிக்க முது கினையும்: அணர்ச்செவி-நிமிர்ந்து நிற்கும் காது களையும் உடைய கழுதைச் சாத்தொடு-வழங்கும்கழுதைக் கூட்டத்தோடு துணையாகச் செல்லும், உல்கு உடைப் பெருவழி-சுங்கம் கொள்ளும் சுங்கச் சாவடிகள் மலிந்த பெருவழிகளில்; கவலை காக்கும்கவர்த்த வழிகளைக் காத்து நிற்கும்; வில் உடை. வைப்பின்-வில்வீரர் வாழ்கின்ற ஊர்களைக் கொண்ட, வியன்காட்டு இயவின்-பரந்து அகன்ற காட்டு வழியில்):